கனநீர் அணு உலை
Appearance
அழுத்த கனநீர் அணு உலை (pressurised heavy water reactor, PHWR) செறிவூட்டப்படாத இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும் கனநீரை (தியூட்டிரியம் ஆக்சைடு D2O) குளிர்வியாகவும் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் ஓர் அணு உலை ஆகும். அழுத்த நீர் அணு உலை போன்றே கன நீரானது அழுத்தத்தில் இயக்கப்படுவதால் கொதிக்காது உயர்ந்த வெப்பநிலையில் இருக்கிறது. கன நீரானது மென்னீரை விட மிகுந்த விலையுடையதாக இருப்பினும் கன நீர் செறிவான நியூத்திரன் இலாபத்தை அளிப்பதால் அணு உலை எரிபொருள் செறிவூட்டுதல் இன்றி இயக்கப்பட வழி செய்கிறது. மேலும் அணு உலை மாற்று எரிபொருள் சுழற்சிகளை திறனுடன் பயன்படுத்தும் வல்லமையைப் பெருக்குகிறது.