கனடிய குறைகேள் அதிகாரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடாவில் குறைகேள் அதிகாரி அலுவலகம் நடுவண் அரசின் எல்லாத் திணைக்களங்களிலும், மாகாண நகர அரசுகளிலும், அரச நிறுவனங்களிலும் உண்டு. குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குறைகேள் அதிகாரி அலுவலகம், முந்தைய படைவீரர்களுக்கான குறைகேள் அதிகாரி அலுவலகம், கொள்வனவுகள் குறைகேள் அதிகாரி அலுவலகம், கனடிய பாதுகாப்புத்துறை குறைகேள் அதிகாரி அலுவலகம் ஆகியன குறிப்பிடத்தக்கன. குழ்ந்தைகள் அல்லது இளையோர் எதிர்நோக்கும் சிக்கல்களை கையாழுவதற்கு எனவும் சிறப்பான குறைகேள் அதிகாரி அலுவலகங்கள் பல மாகாணங்களில் உள்ளன.