கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம்

ஆள்கூறுகள்: 75°N 90°W / 75°N 90°W / 75; -90 (Canadian Arctic Archipelago)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம்
ஆர்க்கிபெல் ஆர்க்டிக்கு கனடியன் (கனடிய பிரான்சியம்)
கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தின் முனைவெறிய நிலப்படம்
புவியியல்
அமைவிடம்வடக்கு கனடா
ஆள்கூறுகள்75°N 90°W / 75°N 90°W / 75; -90 (Canadian Arctic Archipelago)
மொத்தத் தீவுகள்36,563
முக்கிய தீவுகள்பேஃபின் தீவு, விக்டோரியா தீவு, எல்லெசுமியர் தீவு
பரப்பளவு1,424,500 km2 (550,000 sq mi)
நிர்வாகம்
கனடா
ஆட்பகுதிகள்நூனவுட்
வடமேற்கு நிலப்பகுதிகள்
பெரிய குடியிருப்புஇக்காலுயிட், நூனவுட் (மக். 6,184)
மக்கள்
மக்கள்தொகை14,000
அடர்த்தி0.01 /km2 (0.03 /sq mi)

கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் (Canadian Arctic Archipelago) அல்லது பெரும்பாலான நேரங்களில் ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் கனடாவின் பெருநிலத்தின் வடக்கே உள்ள தீவுக் கூட்டங்களாகும்.

வட அமெரிக்காவின் வடகோடியில் ஆர்க்டிக்கு பெருங்கடலில் ஏறத்தாழ 1,424,500 km2 (550,000 sq mi) பரப்பளவில்அமைந்துள்ள இத்தீவுக்கூட்டத்தில் 36,563 தீவுகள் அடங்கியுள்ளன. வடக்கு கனடாவின் பெரும்பான்மையான நூனவுட் மற்றும் வடமேற்கு நிலப்பகுதிகளின் சில பகுதிகள் இதில் அடங்கியுள்ளன.[1] கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தில் புவி சூடாதலின் சில விளைவுகளை உணர முடிகின்றது;[2][3] இவை உருகுவதன் காரணமாக 2100ஆம் ஆண்டில் கடல் மட்டங்கள் 3.5 cm (1.4 அங்) உயரும் என சில கணினி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.[4]

முதன்மைத் தீவுகள்[தொகு]

இந்தத் தீவுக்கூட்டத்தில் bigger than 130 ச.கிமீ விட கூடுதலான பரப்பளவைக் கொண்ட 94 முதன்மைத் தீவுகள் உள்ளன; உலகின் மிகப்பெரிய முதல் பத்துத் தீவுகளில் மூன்று இதில் அடங்கியுள்ளன. இவற்றைத் தவிர 36,469 சிறு தீவுகள் உள்ளன. 10,000 ச.கிமீக்கும் கூடுதலான பரப்பளவுள்ள பெரிய தீவுகளாவன:


பெயர் அமைவிடம்* பரப்பு பரப்புத் தரவரிசை மக்கள்தொகை
(2001)
உலகம் கனடா
பாஃபின் தீவு Nunavut நூ 507,451 km2 (195,928 sq mi) 5 1 9,563
விக்டோரியா தீவு Northwest Territories வமே, Nunavut நூ 217,291 km2 (83,897 sq mi) 9 2 1,707
எல்லெசுமியர் தீவு Nunavut நூ 196,236 km2 (75,767 sq mi) 10 3 168
பேங்க்சு தீவு Northwest Territories வமே 70,028 km2 (27,038 sq mi) 24 5 114
தேவோன் தீவு NU நூ 55,247 km2 (21,331 sq mi) 27 6 0
அக்செல் எய்பெர்கு தீவு Nunavut நூ 43,178 km2 (16,671 sq mi) 32 7 0
மெல்வில் தீவு Northwest Territories வமே, Nunavut நூ 42,149 km2 (16,274 sq mi) 33 8 0
சௌதாம்டன் தீவு Nunavut நூ 41,214 km2 (15,913 sq mi) 34 9 721
வேல்சு இளவரசர் தீவு Nunavut நூ 33,339 km2 (12,872 sq mi) 40 10 0
சாமெர்செட் தீவு Nunavut நூ 24,786 km2 (9,570 sq mi) 46 12 0
பாதர்சுட்டு தீவு Nunavut நூ 16,042 km2 (6,194 sq mi) 54 13 0
இளவரசர் பாட்றிக்கு தீவு Northwest Territories வமே 15,848 km2 (6,119 sq mi) 55 14 0
அரசர் வில்லியம் தீவு Nunavut நூ 13,111 km2 (5,062 sq mi) 61 15 960
எல்லெப் ரிங்னெசு தீவு Nunavut நூ 11,295 km2 (4,361 sq mi) 69 16 0
பைலோட் தீவு Nunavut நூ 11,067 km2 (4,273 sq mi) 72 17 0

* வமே = வடமேற்கு நிலப்பகுதிகள், நூ = நூனவுட்

மேற்சான்றுகள்[தொகு]

  1. Marsh, James H., ed. 1988. "Arctic Archipelago பரணிடப்பட்டது 2011-10-09 at the வந்தவழி இயந்திரம்" The Canadian Encyclopedia. Toronto: Hurtig Publishers.
  2. Thinning of the Arctic Sea-Ice Cover
  3. Arctic sea ice decline: Faster than forecast
  4. Wayman, Erin. "Canada's ice shrinking rapidly". Science News.