கனடாவில் தமிழ்க் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கனடாவில் தமிழ் கல்வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கனேடியத் தமிழர்
கனேடியத் தமிழர்
நபர்கள்
பரம்பல்
அரசியல்
பொருளாதாரம்
பண்பாடும் கலைகளும்
கல்வி
தமிழ்க் கல்வி
சமூக வாழ்வு
அமைப்புகள்
வரலாறு
வரலாற்றுக் காலக்கோடு
குடிவரவு
எதிர்ப்புப் போராட்டங்கள்
இலக்கியமும் ஊடகங்களும்
இலக்கியம்
வானொலிகள்
இதழ்கள்
நூல்கள்
திரைப்படத்துறை
தொலைக்காட்சிச் சேவைகள்
நிகழ்வுகள்
தமிழ் மரபுரிமைத் திங்கள்
ரொறன்ரோ தமிழியல் மாநாடு
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்

கனடாவில் தமிழ்க் கல்வி 1980 களில் இறுதியில் இருந்து நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தாக கனடாவிலேயே அதிக தமிழ் மக்கள் (~2,50,000) வசிக்கிறார்கள். இங்கு பல தன்னார்வல, அரச தமிழ் வகுப்புகள், தமிழ் கல்வித் திட்டங்கள் உண்டு. வசதிகள் பல இருந்தும் இங்கு பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் தமிழ்க் கல்வியைப் பெறுவதில்லை. ஒரு கணிப்பின் படி 33,000 தமிழ்ச் சிறார்களில் ஏறக்குறைய 20,000 பிள்ளைகள் தமிழ் படிப்பதில்லை.[1]

வரலாறு[தொகு]

1984 ஆம் ஆண்டு சூன் மாதம் தமிழர் ஒளி அமைப்பினால் மொன்றியாலில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன.[2]

பாடசாலைத் தமிழ் வகுப்புகள்[தொகு]

அடிப்படை பள்ளியில் இருந்து பல்கலைக்கழக கல்வி வரை தமிழை ஒரு பாடமாக எடுக்க கனடாவில் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் ரொறன்ரோ பெரும் நகரப் பகுதியில் இந்த வாய்ப்புக்கள் உண்டு.

உயர்தர பாடசாலை வகுப்புகள்[தொகு]

உயர் பள்ளி மாணவர்களுக்கு (High School Students) தமது பல்கலைக் கழகத் தேர்வுக்கு தேவையான 30 கிறடிக்களில், தமிழ் மொழிக்காக 4 கிறடிக்கள் பெற முடியும்.

பல்கலைக்கழக வகுப்புகள்[தொகு]

ரொறன்ரோ பல்கலைக்கழகத்திலும், யோர்க் பல்கலைக்கழகத்திலும் தமிழ் வகுப்புகள் உண்டு. தமிழ்நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் ஊடாக கனடாவில் தமிழ்ப் பட்டப்படிப்படையும் மேற்கொள்ளலாம்.[சான்று தேவை]

தமிழ்க் கல்வியின் நிலை[தொகு]

தமிழ் மொழிக் கல்வி பெறும் தமிழ் மாணவர்களின் விழுக்காடு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பெரும்பாலான இரண்டாம் தலைமுறை மாணவர்கள் தமிழ்க் கல்வி அற்றும், தமிழில் பேசத் தெரியாதவர்களாகவும் உள்ளார்கள். தமிழ் மொழிக் கல்வி கற்றாலும், தொடர்ச்சியான தமிழ் வாசிப்பு, எழுத்து மிக அரிது. மிகச் சிறிய விழுக்காட்டினரே தமது பிள்ளைகளுக்கு தமிழைத் திறம்பட கற்றுத் தருகிறார்கள்.

முதலில் முற்றிலும் தமிழாக இருந்த ஊடகங்கள், பின்னர் இரு மொழி ஊடகங்களாகவும், பின்னர் ஆங்கிலம் தனிய ஊடகங்களாகவும் மாறும் தோரணம் இருக்கிறது. வரும் இருபது முப்பது ஆண்டுகளில், தலைமுறை மாற்றம் வந்த பின்னர் தமிழ் மொழிக் கல்வி மேலும் தேக்க நிலையை அடையலாம். அதே வேளை மூன்றாம் தலைமுறையினர் தமது வேர்களையும் மொழியையும் ஆர்வத்துடன் தேடும் நிலைமையும் உருவாகலாம்.

கனடா தமிழ்க் கல்லூரியும் தமிழ் நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் இணைந்து தமிழ்ப் பட்டப்படிப்பை 1999ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகின்றது. தமிழ்ப்பட்டப் படிப்பைக் கற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் இளமானிப் பட்டப் படிப்பு, முதுமானிப் பட்டப் படிப்பு வரை கற்றுக் கொள்ளலாம். பல்கலைக் கழகம் செல்லும் மாணவர்கள் திறமைச்சித்திகளைப் தமிழில் பெற்றுக்கொள்ளலாம்.

காரணங்கள்[தொகு]

பெரும்பாலான தமிழ் மாணவர்கள் வசதிகள் பல இருந்தும் தமிழைக் கற்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • ஆங்கில மயச் சூழல்
  • பெற்றோர் ஆர்வம் இன்மை
  • பழமைவாத பாடத்திட்டம்
  • தமிழ்க் கல்வி உசாத்துணைகள் இல்லாமை (சிறுவர் நூல்கள், இயங்குபடங்கள், விளையாட்டுக்கள்)
  • இணையத்தை, தகவல் தொழில்நுட்பத்தைச் சரிவரப் பயன்படுத்தாதல்
  • தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான களங்கள் அருகி வருதல்

மேலும் காண்க[தொகு]

கனடாவின் தமிழ் பள்ளிகள் பட்டியல்

கனடாவில் தமிழர் கல்வி

மேற்கோள்கள்[தொகு]

  1. பண்டிதர். ச. வே. பஞ்சாட்சரம். கனடா நாட்டில் தமிழ்க் கல்வி தழைக்க.
  2. "புலம்பெயர் மொன்றியாலில் தமிழர்களின் ஆரம்பகால கலை இலக்கிய முயற்சி" (PDF). thaiveedu.com. ஏப்பிரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடாவில்_தமிழ்க்_கல்வி&oldid=2664829" இலிருந்து மீள்விக்கப்பட்டது