கனங் சாரி
கானாங் சாரி (Canang sari, பாலி மொழி: ᬘᬦᬂᬲᬭᬶ ) என்பது பாலி இந்துக்கள் தங்கள் கடவுளான அசிந்தியனுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் நாள்தோறும் வைக்கும் படையல்களில் ஒன்றாகும். பாலி கோயில்களிலும் (புரா), வீடுகளில் உள்ள சிற்றாலயங்களிலும், தரையில் படையலாக கனங் சாரிகள் வைக்கப்படுகின்றன.[1]
சொற்பிறப்பியல்
[தொகு]கனங் சாரி என்ற சொற்றொடரானது பாலி மொழிச் சொற்களான சாரி (சாரம்), கனங் (தென்னை ஓலையால் செய்யப்பட்ட தட்டு போன்ற ஒரு தொன்னை) ஆகியவற்றிலிருந்து வந்ததாகும். [1] கனங் என்பது பழைய சாவக மொழியின் இரண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ளது: க (அழகான), நாங் (நோக்கம்) ஆகியவை ஆகும்.
பாகங்கள்
[தொகு]கனங் சாரியில் பெபோரோசன், செப்பர், ரக-ரக, சாம்பியன் உரசரி ஆகிய பொருட்கள் உள்ளன. [1] பெப்போரோசன் என்பது முதன்மையாக வெற்றிலை, வாழை இலை, சுண்ணாம்பு, கேம்பியர், பிரெஸ்டிஜியம், புகையிலை, பாக்கு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். பெப்போரோசன் என்பதானது இந்து கடவுள்களான மும்மூர்த்திகளைக் குறிக்கிறது. சிவனை சுண்ணாம்பாலும், விஷ்ணுவை வெற்றிலை பாக்காலும், பிரம்மனை கேம்பீயராலும் குறிக்கின்றனர். [1] அர்த்த சந்திரனின் அடையாளமாக கனங் சாரியில் உள்ள தென்னை ஓலையால் செய்யப்பட்ட ஒரு தொன்னை ( செப்பர் ) இருக்கிறது. ரகா-ரகாவின் மேல் சாம்பியன் உரசாரி உள்ளது. அதன் மேல் ஒரு குறிப்பிட்ட திசையில் பூக்கள் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு திசையும் ஒரு இந்துக் கடவுளை ( தேவர் ) குறிக்கின்றது:
- ஈஸ்வரனின் அடையாளமாக கிழக்கு நோக்கி உள்ள வெள்ளை நிறப் பூக்கள்
- பிரம்மனின் அடையாளமாக தெற்கு நோக்கி உள்ள சிவப்பு நிறப் பூக்கள்
- மகாதேவனின் அடையாளமாக மேற்கு நோக்கி உள்ள மஞ்சள் நிற பூக்கள்
- விஷ்ணுவின் அடையாளமாக வடக்கு நோக்கிச் உள்ள நீலம் அல்லது பச்சை நிற மலர்கள்.
ஒரு கனங் சாரியில் உள்ள கனாங்கின் மேல் ஒரு அளவு கெபெங் ( நாணயம் ) அல்லது காகிதப் பணத்தை வைப்பதன் மூலம் அது நிறைவுறுறது. இது காணிக்கையின் சாராம்சத்தை ("சாரி") உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. [2]
பயன்பாடு
[தொகு]உலகிற்கு அமைதியை அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வடிவமாக , அசிந்தியனுக்கு ஒவ்வொரு நாளும் கனங் சாரி படைக்கப்படுகிறது; இது மிகவும் எளிமையான தினசரி வீட்டுப் படையலாகும். இந்தப் படையலுக்குப் பின்னால் உள்ள தத்துவம் சுய தியாகம் ஆகும், ஏனெனில் இவற்றைத் தயாரிக்க நேரமும் முயற்சியும் தேவை. சமூகத்திலோ அல்லது குடும்பத்திலோ மரணம் ஏற்பட்டால் கனங் சாரி படைக்கப்படுவதில்லை. [3] கிளிவோன், பூர்ணமா, திலேம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் கானாங் சாரி பயன்படுத்தப்படுகிறது. [2]
காட்சியகம்
[தொகு]-
ஆனைக் குகைக்கு முன் வைக்கபட்டுள்ள தட்டு
-
உள்ளூர் கடைவீதியில் விற்பனைக்காக கனாங் தயாரிக்கும் இளம் பாலி பெண்.
-
காருக்குள் கனாங்
-
சாலையில் கனாங்
-
குட்டா கடற்கரையில் கனங் சாரி
-
குட்டா கடற்கரையில் கனங் சாரி
-
காங்குவில் உள்ள ஒரு கடற்கரையில் ஊதுவத்தியுடன்
-
காங்குவில்
-
புரா பெஜி ஆனந்தபோகா, பன்யுவாங்கி ரீஜென்சி, கிழக்கு ஜாவாவில் கிழக்கு சாவகத்தில் கனங் சாரி
-
பாலி பெண்கள் காலையில் மலர் படையல் சடங்கை செய்கின்றனர்.
-
குடா, பாலியில் கானாங் படையல் இடுவதற்கான இடம்
-
கனங் சாரி படையல் செய்வது எப்படி என்பது குறித்து வகுப்பு எடுக்கும் ஒரு பாலி பெண்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Meaning Canang as a Means of Prayers in the Tanah Lot". Retrieved 29 December 2012.
- ↑ 2.0 2.1 "Banten Bali". Retrieved 29 December 2012.
- ↑ "Simple and meaningful offerings are enough: Religious leader". The Jakarta Post. http://www2.thejakartapost.com/bali-daily/2012-09-01/simple-and-meaningful-offerings-are-enough-religious-leader.html.Suriyani, Luh De. "Simple and meaningful offerings are enough: Religious leader". The Jakarta Post. Archived from the original on 18 May 2013. Retrieved 8 January 2013.