உள்ளடக்கத்துக்குச் செல்

கனக் வர்தன் சிங் தியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனக் வர்தன் சிங் தியோ
துணைமுதலமைச்சர்-ஒடிசா
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சூன் 2024
ஆளுநர்கம்பம்பதி அரி பாபு
அமைச்சகம் மற்றும் துறைகள்
  • விவசாயம் மற்றும் விவசாயிகளின் அதிகாரமளித்தல்
  • எரிசக்தி
முன்னையவர்பசந்த் குமார் பிசுவால் (2000)
நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர்
ஒடிசா அரசு
பதவியில்
18 மே 2004  9 மார்ச் 2009
முன்னையவர்சமீர் டே
பின்னவர்நவீன் பட்நாய்க்
பொது நிறுவனங்கள் துறை அமைச்சர்
ஒடிசா அரசு
பதவியில்
6 ஆக்த்து 2002  9 மார்ச்சு 2009
முன்னையவர்பெத் பிரகாஷ் அகர்வால்
பின்னவர்நவீன் பட்நாய்க்
தொழிற்துறை அமைச்சர்
ஒடிசா அரசு
பதவியில்
6 மார்ச்சு 2000  16 மே 2004
முன்னையவர்அமர்நாத் பிரதான்
பின்னவர்பிசுவபூசண் அரிச்சந்தன்
உறுப்பினர்-ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்சரோஜ் குமார் மெகர்
தொகுதிபட்நகர்
பதவியில்
1995–2019
முன்னையவர்பிபேகானந்தா மெகர்
பின்னவர்சரோஜ் குமார் மெகர்
தொகுதிபட்நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூன் 1956 (1956-06-14) (அகவை 70)
பலாங்கீர், ஒடிசா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சங்கீதா குமாரி சிங்க் டேவ்
பிள்ளைகள்நிவ்ரித்தி குமாரி தியோ
பெற்றோர்
  • இராஜ் ராஜ் சிங் தியோ (தந்தை)
வாழிடம்சைலஸ்ரீ அரண்மனை, பலாங்கீர், ஒடிசா
கல்விஇளங்கலை
முன்னாள் மாணவர்தில்லி பல்கலைக்கழகம்
மூலம்:

கனக் வர்தன் சிங் தியோ (Kanak Vardhan Singh Deo) என்பவர் ஒடிசாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் பாட்னா சமஸ்தானத்தின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். தியோ ஒடிசாவின் 5ஆவது துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். மோகன் மஜியின் தலைமையிலான பாஜக அரசில் 2024 முதல் விவசாயம் மற்றும் விவசாயிகள் அதிகாரமளித்தல் அமைச்சகம், எரிசக்தி அமைச்சகத்தின் அமைச்சராக உள்ளார்.[1] இவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.[2][3][4][5] தியோ ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் இராஜேந்திர நாராயண் சிங் தியோ பேரன் ஆவார்.[6][7]

இளமை

[தொகு]

கனக் வர்தன் சிங் தியோ பாட்னா முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இப்போது ஒடிசாவில் உள்ளனர். இவர் போலங்கீரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் ராஜ் சிங் தியோவின் மகன் ஆவார்.[8] தியோ ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் இராஜேந்திர நாராயண் சிங் தியோ மற்றும் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் மகள் கைலாசு குமாரி தேவி ஆகியோரின் பேரன் ஆவார்.[9][8] தியோ தனது இளங்கலைப் படிப்பினை. தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.[10]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

தியோ 2000 முதல் 2004 வரையிலும், 2004 முதல் 2009 வரையிலும் தொழில்துறை மற்றும் பொது நிறுவன அமைச்சராக இருந்தார். மேலும் நவீன் பட்நாயக் அரசாங்கத்தில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பொது நிறுவன அமைச்சர் ஆகவும் பணியாற்றினார்.[11][12][13]

தியோ 2024 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள பட்நகர் சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார். இவர் ஒடிசா பாஜகவின் தலைவராகவும் பதவிவகித்துள்ளார்.[10]

சூன் 12, 2024 அன்று, புவனேசுவரில் உள்ள ஜனதா மைதானத்தில் பிரவதி பரிடா மற்றும் மோகன் சரண் மாஜி ஆகியோருடன் ஒடிசாவின் துணை முதல்வராக இவர் பதவியேற்றார். ஆளுநர் ரகுபர் தாஸ் இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக ஆளும் 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.[14][15][16][17][13][18]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

தியோவின் மனைவி சங்கீதா குமாரி சிங் தியோ ஆவார். இவர் இந்திய மக்களவையின் 12,13,14 மற்றும் 16 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர்களுக்கு நிவ்ரித்தி குமாரி என்ற மகள் உள்ளார். நிவிர்த்தி தொழிலதிபரும், முன்னாள் மேவார் அரச குடும்ப உறுப்பினருமான இலட்ச்யராஜ் சிங் மேவார் என்பவரை மணந்தார். இவர் தொழிலதிபரான அரவிந்த் சிங் மேவாரின் மகனும் ஆவார்.[19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jaiswal, Arushi (2024-06-11). "Kanak Vardhan Singh Deo, Pravati Parida to be new Deputy Chief Ministers of Odisha". www.indiatvnews.com (in ஆங்கிலம்). Archived from the original on 11 June 2024. Retrieved 2024-06-11.
  2. Mohapatra, Debabrata (21 January 2014). "Udaipur Prince and Balangir Princess to marry today". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/Udaipur-Prince-and-Balangir-Princess-to-marry-today/articleshow/29130354.cms. பார்த்த நாள்: 11 November 2018.
  3. "Highlights: BJP Tribal Leader, 4-Time MLA Mohan Majhi Sworn In As Odisha Chief Minister". NDTV.com. Archived from the original on 15 June 2024. Retrieved 2024-06-13.
  4. Barik, Satyasundar (2024-06-12). "Mohan Charan Majhi sworn in as Odisha's first BJP Chief Minister" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 9 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241009065656/https://www.thehindu.com/news/national/odisha/mohan-charan-majhi-sworn-in-as-odishas-first-bjp-chief-minister/article68281205.ece.
  5. "Odisha Cabinet portfolios: CM Mohan Charan Majhi keeps Home" (in en-IN). India News. 2024-06-13. https://www.indiatvnews.com/news/india/odisha-cabinet-portfolios-cm-mohan-charan-majhi-keeps-home-ministry-kanak-vardhan-singh-agriculture-pravati-parida-women-child-development-finance-2024-06-15-937131.
  6. "Odisha's first BJP CM, Deputy CMs to take oath today: Who are Mohan Charan Majhi, K V Singh Deo, Pravati Parida?". The Indian Express. 12 June 2024. Archived from the original on 12 June 2024. Retrieved 19 March 2025.
  7. Sarangi, Suresh Prasad (2017). "The Role of R.N. Singh Deo in the State Politics of Odisha in the Pre and Post-Independent Political Scenario: A Critical Study" (PDF). Odisha Review. p. 29. ISSN 0970-8669. Archived (PDF) from the original on 20 February 2021. Retrieved 8 March 2024.
  8. 1 2 "Odisha's first BJP CM, Deputy CMs to take oath today: Who are Mohan Charan Majhi, K V Singh Deo, Pravati Parida?". The Indian Express. 12 June 2024. Archived from the original on 12 June 2024. Retrieved 19 March 2025.
  9. Sarangi, Suresh Prasad (2017). "The Role of R.N. Singh Deo in the State Politics of Odisha in the Pre and Post-Independent Political Scenario: A Critical Study" (PDF). Odisha Review. p. 29. ISSN 0970-8669. Archived from the original (PDF) on 20 February 2021. Retrieved 8 March 2024.
  10. 1 2 My neta
  11. "A single Orissa royal family of several political hues". Archived from the original on 9 September 2017. Retrieved 9 September 2017.
  12. "PRESENT RULER: HH Maharaja KANAK VARDHAN SINGH DEO". Archived from the original on 13 September 2017. Retrieved 9 September 2017.
  13. 1 2 "KV Singh Deo, Pravati Parida to be new Deputy Chief Ministers of Odisha". India Today (in ஆங்கிலம்). 2024-06-11. Archived from the original on 14 June 2024. Retrieved 2024-06-11.
  14. "Highlights: BJP Tribal Leader, 4-Time MLA Mohan Majhi Sworn In As Odisha Chief Minister". NDTV.com. Archived from the original on 15 June 2024. Retrieved 2024-06-13.
  15. Barik, Satyasundar (2024-06-12). "Mohan Charan Majhi sworn in as Odisha's first BJP Chief Minister" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 9 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241009065656/https://www.thehindu.com/news/national/odisha/mohan-charan-majhi-sworn-in-as-odishas-first-bjp-chief-minister/article68281205.ece.
  16. "Odisha Cabinet portfolios: CM Mohan Charan Majhi keeps Home" (in en-IN). India News. 2024-06-13 இம் மூலத்தில் இருந்து 15 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240615161711/https://www.indiatvnews.com/news/india/odisha-cabinet-portfolios-cm-mohan-charan-majhi-keeps-home-ministry-kanak-vardhan-singh-agriculture-pravati-parida-women-child-development-finance-2024-06-15-937131.
  17. "Meet Pravati Parida, BJP leader set to be Odisha's first female Deputy CM | Latest News India - Hindustan Times". Archived from the original on 11 June 2024. Retrieved 11 June 2024.
  18. "Odisha New CM Live Updates: Mohan Charan Majhi declared new Odisha Chief Minister, KV Singh Deo, Pravati Parida to be Deputy CMs". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-11. Archived from the original on 11 June 2024. Retrieved 2024-06-11.
  19. Jayaraman, NP (4 April 2025). "Gaddi Utsav: Dr Lakshyaraj Singh takes the mantle as 77th custodian of Mewar". Deccan Herald. Retrieved 26 April 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனக்_வர்தன்_சிங்_தியோ&oldid=4488061" இலிருந்து மீள்விக்கப்பட்டது