கந்தையா ஆனந்தநடேசன்
கந்தையா ஆனந்தநடேசன் (Kandiah Anandanadesan, 1961 -16 ஏப்ரல் 2020) என்பவர் இலங்கை-பிரித்தானிய மிருதங்க ஆசிரியர் ஆவார்.
கந்தையா 1961 ஆம் ஆண்டு இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பழையில் பிறந்தார். இவர் யூனியன் கல்லூரியிலும், மகாஜன கல்லூரியிலும் பயின்றார். குரு கே. பி. சின்னராஜாவிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.[1] இவரின் தந்தை யூனியன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார், அதே நேரத்தில் இவரின் தாயார் மகாஜன கல்லூரியில் பணிபுரிந்து பள்ளி ஆசிரியராக இருந்தார்.[2] இவர் கருநாடக இசைக் கலைஞராக திகழ்ந்தார். 1980 களில் இலண்டனுக்கு குடிபெயர்ந்தார். மிருதங்கம் மட்டுமல்லாமல், கடம், கஞ்சிரா, மோர்சிங், தவில் உள்ளிட்ட பிற முக்கிய பாரம்பரிய கருநாடக தாள இசைக் கருவிகளையும் தன் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.[2] இவர் 2020 ஏப்ரல் 16 அன்று கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக லண்டனில் தன் 58 வயதில் இறந்தார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "ஆனந்தநடேசன்; கொரோனாவுக்குப் பலியான இசைக்கலைஞன்". thinakkural.lk (in ஆங்கிலம்). Retrieved 2025-02-04. [தொடர்பிழந்த இணைப்பு]
- 1 2 3 "British Tamils mourn popular miruthangam artiste and teacher | Tamil Guardian". www.tamilguardian.com. Retrieved 2025-02-04.
- ↑ "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மிருதங்க வித்துவான் லண்டனில் கொரோனாவுக்குப் பலி!! (photos)". Vampan (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-16. Retrieved 2025-02-04.
- ↑ "பிரபல மிருதங்கக் கலைஞர் கொரோனாவினால் உயிரிழப்பு!". www.thaarakam.com. Retrieved 2025-02-04.