ஸ்ரீ கந்த லீலா
தோற்றம்
(கந்தலீலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஸ்ரீ கந்த லீலா | |
|---|---|
| இயக்கம் | எச். எஸ். மேத்தா |
| தயாரிப்பு | எம். ஏ. எஸ். செல்லம் & கோ. கோவை பிரீமியர் சினிடோன் |
| கதை | எல். நஞ்சப்ப செட்டியார் |
| இசை | ஜி. கோவிந்தராஜுலு நாயுடு |
| நடிப்பு | ராஜா எம். ஜி. தண்டபாணி வசந்தா சுந்தராம்பாள் |
| ஒளிப்பதிவு | ஜே. எஸ். பட்டேல் |
| நடன அமைப்பு | மீனாட்சிசுந்தரம் |
| வெளியீடு | மார்ச்சு 19, 1938 |
| ஓட்டம் | . |
| நீளம் | 18750 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஸ்ரீ கந்த லீலா1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பிரீமியர் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா தண்டபாணி, வசந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிப்பு
[தொகு]இத்திரைப்படத்தில் நடித்த நடிக, நடிகையர்:[2]
| நடிகர் | பாத்திரம் |
|---|---|
| ராஜா எம். ஜி. தண்டபாணி | சூரன் |
| எம். வி. மணி | வீரவாகு |
| மாஸ்டர் பி. எஸ். மணி | பாலமுருகன் |
| மாஸ்டர் முருகேசன் | தண்டபாணி |
| மாஸ்டர் நாராயணன் | சுப்பிரமணியன் |
| இராமைய சாத்திரி | இடும்பன் |
| ஞானமணி | நாரதர் |
| செல்வமணி | சயந்தன் |
| வி. வி. எஸ். மணி | பானுகோபன் |
| டி. ஆர். குப்புசாமி பிள்ளை | பரமசிவன் |
| கோவிந்தராஜுலு நாயுடு | விட்டுணு |
| சவுடப்பா | பிரமன் |
| ஆறுமுகம் | இந்திரன் |
| நடிகை | பாத்திரம் |
|---|---|
| வசந்தா | வள்ளி |
| சுந்தராம்பாள் | தெய்வயானை |
| தனலட்சுமி | பார்வதி |
| சுசீலாதேவி | இந்திராணி |
| சீதாலட்சுமி | அசமுகி |
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்துக்கான பாடல்களை எல். நஞ்சப்ப செட்டியார் எழுதியிருந்தார். வித்துவான் ஜி. கோவிந்தராஜுலு நாயுடு பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். வைத்தீசுவரன் கோயில் மீனாட்சிசுந்தர நட்டுவனாரும் அவரது குழுவினரும் நடனங்களை அமைத்திருந்தனர். பாடல்கள் ஓடியன் கிராமபோன் தட்டுகளில் சென்னை சரசுவதி ஸ்டோர்சினரால் வெளியிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2022-12-02. Retrieved 2016-11-24.
- ↑ 2.0 2.1 ஸ்ரீ கந்த லீலா பாட்டுப் புத்தகம், 1938, ரிலையன்சு பிரசு, கோயம்புத்தூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- Sri Kandha Leela
- யூடியூபில் வந்தாட்கொள்ளல் ஆகாதா - சுந்தராம்பாள் (தெய்வயானை) பாடிய பாடல்