கத்ரீனா கர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கத்ரீனா கர்ட்
2009 இணை ஒலிம்பிக் போட்டிகளில் கத்ரீனா கர்ட்
தனிநபர் தகவல்
சுட்டுப் பெயர்(கள்)குருவி[1]
தேசியம் ஐக்கிய இராச்சியம்
பிறப்பு17 மே 1990 (1990-05-17) (அகவை 33)
பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), இங்கிலாந்து
விளையாட்டு
நாடு ஐக்கிய இராச்சியம்
 இங்கிலாந்து
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)200 மீ டி36 & 100 மீ டி37
பயிற்றுவித்ததுஇராப் எல்சக்
பதக்கத் தகவல்கள்
நாடு  ஐக்கிய இராச்சியம்

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 இலண்டன் 4x100 மீ
ஐபிசி சர்வதேச தடகளப்போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011 கிறைஸ்ட்சேர்ச் 200மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 கிறைஸ்ட்சேர்ச் 100மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 கிறைஸ்ட்சேர்ச் 4 x 100மீ
ஐபிசி ஐரோப்பிய தடகளப்போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 ஸ்டெட்கனால் 100மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 ஸ்டெட்கனால் 200மீ
நாடு  இங்கிலாந்து
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி 100மீ
2012 ஆகத்து 8 இற்றைப்படுத்தியது.

கத்ரீனா கர்ட் (Katrina Hart) (பிறப்பு:1990 மே 17) 2010 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 100 மீ டி 37 வகைப்பாடு (பெருமூளை வாதம் கொண்ட விளையாட்டு வீரர்கள்) போட்டியில் இங்கிலாந்துக்காக தங்கப்பதக்கம் வென்ற ஒரு ஆங்கில விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2008 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். ஆனால் காயம் மூலம் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் ஐபிசி தடகள உலகப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் 1990 17 இல் பெருமூளை வாதத்துடன் பிறந்தார். இவர் பெர்சோர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மேலும் 14 வயதில் ஓட ஆர்ம்பித்தார். ஒரு வருடம் கழித்து 2005 ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பியப் போட்டிகளில் டி37 வகைப்பாடு 100மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று, பிரிட்டிசு அணியின் இளைய உறுப்பினரானார். [2] [3] [4]

விளையாட்டு வாழ்க்கை[தொகு]

2007 ஆம் ஆண்டில், டி 37 வகை 100மீட்டர் ஓட்டத்தில் உலகின் இரண்டாவது வேகமான இடத்தைப் பிடித்தார் . டி37 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாவது வேகமான இடத்தைப் பிடித்தார். [5] 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கிற்கு இவர் பிரிட்டிசு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 100மீட்டர் இறுதிப் போட்டிகளில் ஓடும்போது இவரது தொடை எலும்புக்கு காயம் ஏற்பட்டது. ஏழாவது இடத்தில் வந்தார். அதன் விளைவாக 200மீட்டரிலிருந்து விலகினார். [2] இவர் தனது காயங்களால் பாதிக்கப்பட்டு விளையாட்டுக்குச் சென்றார். பின்னர் இது தனக்கு மனரீதியாக பலப்படுத்தியதாகக் கூறினார். [6]

இதற்கு பிறகு இவர் பாத் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற சென்றார். இவர் 2010 பொதுநலவாய போட்டிகளில் இங்கிலாந்துக்காக போட்டியிட்டார். அங்கு டி 37 வகைபாட்டில் 100மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். [3] இது இவரது முதல் பெரிய சர்வதேச வெற்றியாகும். மேலும் இவர் ஒரு புதிய தனிப்பட்ட சிறந்த நேரத்தை 14.75 விநாடியாக நிர்ணயித்தார். [7] இவர் 2011 ஐபிசி தடகள உலகப் போட்டியில்மூன்று பதக்கங்களை வென்றார். இது டி 37 வகை 200 மீட்டரில் இல் தங்கமும், டி 37 வகை 100 மீட்டரிலும், டி35-டி38 வகை 4x100 மீ ரிலேவிலும் வெண்கலம் வென்றார். 2012 ஆம் ஆண்டில் நடந்த ஐரோப்பியப் போட்டிகளில், டி 37 வகை 100மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 2011 ஆம் ஆண்டில் பாத் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு செயல்திறன் பட்டம் பெற்றார். [3] பறவைகளின் மீதான பயமான ஆர்னிடோபோபியாவால் அவதிப்பட்டாலும், இவர் "குருவி" என்று செல்லப்பெயர் பெற்றார். அவர் பர்மிங்காம் நகர கால்பந்து அணியின் ஆதரவாளர் ஆவார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Katrina Hart". Channel 4. http://paralympics.channel4.com/the-athletes/athleteid=143/qa.html. பார்த்த நாள்: 8 August 2012. 
  2. 2.0 2.1 "Katrina Hart". The Daily Telegraph இம் மூலத்தில் இருந்து 23 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120523203106/http://www.telegraph.co.uk/sport/olympics/paralympic-sport/paralympics-gb/8725601/Katrina-Hart-Paralympics-GB-London-2012-Olympics.html. பார்த்த நாள்: 8 August 2012.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "telebio" defined multiple times with different content
  3. 3.0 3.1 3.2 "Katrina Hart". Paralympics.org இம் மூலத்தில் இருந்து 9 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120809155854/http://www.paralympics.org.uk/gb/athletes/katrina-hart. பார்த்த நாள்: 8 August 2012.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "paralympicsbio" defined multiple times with different content
  4. "Commonwealth champion Katrina Hart targets world stage". BBC Sport. http://news.bbc.co.uk/sport1/hi/other_sports/disability_sport/9192548.stm. பார்த்த நாள்: 8 August 2012. 
  5. Hudson, Elizabeth (9 January 2008). "Hart gets set". BBC Sport. http://news.bbc.co.uk/sport1/hi/other_sports/disability_sport/7177078.stm. பார்த்த நாள்: 8 August 2012. 
  6. Hudson, Elizabeth (30 November 2010). "Commonwealth champion Katrina Hart targets world stage". BBC Sport. http://news.bbc.co.uk/sport1/hi/other_sports/disability_sport/9192548.stm. பார்த்த நாள்: 8 August 2012. 
  7. "Commonwealth champion Katrina Hart targets world stage". BBC Sport. http://news.bbc.co.uk/sport1/hi/other_sports/disability_sport/9192548.stm. பார்த்த நாள்: 8 August 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்ரீனா_கர்ட்&oldid=3842296" இலிருந்து மீள்விக்கப்பட்டது