கத்துக்குட்டி
கத்துக்குட்டி | |
---|---|
இயக்கம் | Era. Saravanan |
தயாரிப்பு | R. Ramkumar |
இசை | Aruldev |
நடிப்பு | Narain சிருஷ்டி டங்கே Soori |
ஒளிப்பதிவு | Santhosh Sriram |
கலையகம் | OWN Productions |
வெளியீடு | 9 October 2015 |
நாடு | India |
மொழி | Tamil |
கத்துக்குட்டி (Kaththukkutti) என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஆர். சரவணன் இயக்கத்தில், ராம்குமார் தயாரித்திருந்த இந்த படத்தில் நரேன் , சிருஷ்டி டங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூரி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் அக்டோபர் 2015இல் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் பார்வையாளர்களிடமிருந்து குறைந்த வரவேற்பே கிடைத்தது.[1]
நடிப்பு
[தொகு]- அறிவழகனாக நரேன்
- புவனாவக சிருஷ்டி டங்கே
- அறிவழகனின் தாயாராக துளசி
- ராஜா
- மாறன்
- வி. ஞானவேல்
- கே. ஜி. மோகன்
- காதல் சரவணன்
- தேனி முருகன்
- நாதசுவரம் கண்ணன்
- தேவிப்பிரியா
- சந்தியா
தயாரிப்பு
[தொகு]முகமூடி (2012) படத்துக்குப் பிறகு நரேன் அறிமுக இயக்குனர் சரவணனுடன் இணைந்து 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிகர்-இயக்குநர் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜும் நடித்துள்ளார். ஜூன் 2014இல் சந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் படத்தில் சூரிக்கு இரண்டு ஜோடிகளில் ஒருவராக தோன்றுகிறர். மற்றொருவர் தேவிபிரியா.[2]
ஒலிப்பதிவு
[தொகு]படத்துக்கு இசையமைப்பாளர் அருள்தேவ் இசையமைத்துள்ளார்.
வரவேற்பு
[தொகு]சிஃபி "கத்துக்குட்டியின் ஒரே பிரச்சனை குறைந்த தயாரிப்பு தரம், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை சராசரியாகவே இருக்கிறது. ஆயினும்கூட, படம் அதன் நல்ல தருணங்களைக் கொண்டுள்ளது. ஒரு முறை பார்க்கலாம். நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். படத்தை "சராசரிக்கு மேல்" என்று விவரித்தது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ Rinku, Gupta (13 November 2013). "Tulasi rocks in her third innings". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (சென்னை). http://www.newindianexpress.com/entertainment/reviews/Tulasi-rocks-in-her-third-innings/2013/11/13/article1883126.ece?service. பார்த்த நாள்: 28 August 2016.
- ↑ Surendhar, MK (15 August 2014). "Soori to romance Sandhya in Naren's Kathukutti". Onlykollywood. பார்க்கப்பட்ட நாள் 28 August 2016.
- ↑ "Kathukutty - Review". சிஃபி. 15 October 2015. Archived from the original on 11 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 August 2016.Please specify a rating.