கத்தி சவுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தி சவுக்கு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
உயிரிக்கிளை:
பேரினம்:
இனம்:
A. mangium
இருசொற் பெயரீடு
Acacia mangium
Willd.
Occurrence data from AVH
வேறு பெயர்கள்

கத்தி சவுக்கு (Acacia mangium) என்பது பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பூக்கும் மரமாகும். இது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆத்திரேலியாவின் வடகிழக்கு குயின்ஸ்லாந்து, பப்புவா நியூ கினியாவின் மேற்கு மாகாணம், பப்புவா மற்றும் கிழக்கு மலுக்கு தீவுகளைச் சேர்ந்தது.[3] இதன் பொதுவான பெயர்களில் black wattle, hickory wattle, mangium, forest mangrove ஆகியவை அடங்கும். இதன் பயன்பாடுகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் மரப் பொருள் ஆகியவை அடங்கும்.

இது முதன்முதலில் 1806 இல் கார்ல் லுட்விக் வில்டெனோவால் விவரிக்கப்பட்டது, அவர் இது மொலுக்காசில் காணப்படுவதாக விவரித்தார்.[4]

சாகுபடி[தொகு]

கத்தி சவுக்கு 30 மீட்டர்கள் (98 அடி) வரை வளரும். இது பெரும்பாலும் நேராக வளரும். கத்தி சவுக்கில் ஓரு கிலோவுக்கு 142,000 விதைகள் வரை இருக்கும்.[5] இதன் விதைகளைன் முளைப்புத் திறனை அதிகரிக்க, இயந்திர ஸ்கார்ஃபிகேஷன் (மேற்பரப்பை சொறிதல்) அல்லது கொதிக்கும் நீரைக் கொண்டு சில செயல்பாடுகள் செய்தல் போன்ற சில நடவடிக்கைகள் தேவைப்படும். இந்த செயல்கள் விரைவான முளைப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் இதன் முளைப்புத்திறன் 75% ஐ விட அதிகமாகும்.[6] பல பருப்பு வகைகளைப் போலவே, இது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்த வல்லது.[7] மேலும் இது வேளாண் காடு வளர்ப்பு திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக 3 முதல் 4 மீ உயரம் உயரம் வளர்வது வழக்கம். பூமத்திய ரேகைக்கு அப்பால் உள்ள பகுதிகளில் வளர்ச்சி மெதுவாக இருக்கும்.[6]

பயன்கள்[தொகு]

கட்டைகள்[தொகு]

கத்தி சவுக்கு மரங்களைக் கொண்டு மென்மரக் கட்டை, வயிரக்கட்டை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. வயிரக்கட்டையின் நிறம் பழுப்பேறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். மரம் மிகவும் கடினமானதாகவும், மிகவும் வலிமையானதாகவும், கடினமானதாகவும் இருக்கும், மேலும் சிதையாமலும், மோசமாக விரிசல் ஏற்படாததாகவும் இருக்கும் என்பதால் இது மரச்சாமான்கள், கதவுகள் மற்றும் சன்னல் சட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மெருகூட்டிய பின் பளபளப்பான மற்றும் மென்மையான மேற்பரப்பு கொண்டதாக இருப்பதால் மரச்சட்ட தளஅமைப்பு மற்றும் கலைப்பொருட்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.[8]

கூழ் மற்றும் காகிதம்[தொகு]

கத்தி சவுக்கானது காகிதம் தயாரிப்பதற்கு ஏற்ற செல்லுலோஸ் இழைகள் கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தோனேசியாவில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது .[9]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Arnold, R.; Thomson, L. (2019). "Acacia mangium". IUCN Red List of Threatened Species 2019: e.T18435820A18435824. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T18435820A18435824.en. https://www.iucnredlist.org/species/18435820/18435824. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Acacia mangium – ILDIS LegumeWeb". ildis.org. Archived from the original on 6 April 2008. பார்க்கப்பட்ட நாள் 26 April 2008.
  3. Francis, John K. (1 January 2003). "Acacia mangium Willd". Tropical Tree Seed Manual. Reforestation, Nurseries & Genetics Resources. Archived from the original on 16 January 2009. பார்க்கப்பட்ட நாள் 24 February 2009.
  4. Willdenow, C.L. (1806). "Acacia Mangium". Species Plantarum Edn. 4 4 (2): 1053. https://www.biodiversitylibrary.org/page/26070794. 
  5. "Growing Process of Tropical Trees-(Compiled version)". ftbc.job.affrc.go.jp. Archived from the original on 12 April 2008. பார்க்கப்பட்ட நாள் 26 April 2008.
  6. 6.0 6.1 "Discover Life/ Royal Botanical Gardens". Archived from the original on 20 January 2016. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
  7. "Acacia mangium". hort.purdue.edu. Archived from the original on 11 May 2008. பார்க்கப்பட்ட நாள் 26 April 2008.
  8. Sharma, S. K.; Kumar, P.; Rao, R. V.; Sujatha, M.; Shukla, S. R. (2011). "Rational utilization of plantation grown Acacia mangium Willd". Journal of the Indian Academy of Wood Science 8 (2): 97–99. doi:10.1007/s13196-012-0035-x. 
  9. "Short Review: The Chemistry and Pulping of Acacia" (PDF). Archived from the original (PDF) on 2022-01-20. பார்க்கப்பட்ட நாள் 2022-02-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தி_சவுக்கு&oldid=3928505" இலிருந்து மீள்விக்கப்பட்டது