கத்தரியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தரியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்பது கத்தரிக்காய் சாகுபடியில் அதன் பயிர்களை நன்கு பாதுகாப்பது குறித்த ஒரு செய்முறையாகும்

இயந்திர முறைகள்[தொகு]

  1. பறவை தாங்கிகளை எக்டருக்கு 25 வைப்பதன் மூலம் பூச்சிகளை உண்ணும் பறவைகளை கவர்ந்து இழுத்து பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
  2. டெல்டா பொறி மற்றும் மஞ்சள் வண்ண அட்டை பொறியை எக்டருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைப்பதன் மூலம் தத்துப்பூச்சி மற்றும் வௌளை ஈக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
  3. தண்டு மற்றும் காய்புழுவின் பாதிப்பை கண்காணிக்க இனக்கவர்ச்சி பொறியை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையிலும், கவர்ந்திழுக்க எக்டருக்கு 100 என்ற எண்ணிக்கையிலும் வைக்க வேண்டும்.
  4. நட்ட 30 நாட்கள் கழித்து வேப்பம்புண்ணாக்கு 50 கிலோ/எக்டர் என்ற அளவில் இடுவது புழு தாக்குதலை குறைக்கும்.
  5. பாதிக்கப்ட்ட தண்டு மற்றும் காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.

உயிரியல் முறைகள்:[தொகு]

  1. டிரைக்கோகிரம்மா பிரேசிலின்ஸிஸ் முட்டை ஒட்டுண்ணியை ஒரு லட்சம்/எக்டர் என்றளவில் ஆறுமுறை பூக்கும் தருணத்தில் இருந்து விடுதல் தண்டு மற்றும் காய்ப்புழுவின் தாக்குதலை குறைக்க உதவும்.
  2. சிற்றிலை நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  3. வேப்பங்கொட்டை கரைசல் 5சதம் மூன்று முறை தெளிப்பது சாறு உண்ணும் பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும்.
  4. ஹட்டா புள்ளி வண்டுகளின் முட்டைகள், இளம் பூச்சிகள் மற்றும் வண்டுகளை அவ்வப்போது சேகரித்து அழிக்க வேண்டும்.

சாகுபடி முறைகள்:[தொகு]

  1. தொடர்ச்சியாக கத்தரியை வயலில் பயிரிடுவதால் தண்டு மற்றும் காய்ப்புழு மற்றும் வாடல் நோய் பாதிப்பு அதிகரிக்கும். எனவே பயிர் சுழற்சியை கடைப்பிடித்தல் அவசியம்.
  2. பசுந்தாள் உரங்களை இடுதல், நிலப்போர்வை அமைத்தல் மற்றும் பிளிச்சிங் பவுடர் இடுதல் ஆகியவை பாக்டீரிய வாடல் நோயை தவிர்க்க உதவும்.
  3. பச்சை தத்துப்பபூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க வெண்டையை தடுப்பு பயிராக நட வேண்டும். வெண்டையில் எண்ணிக்கை அதிகமாகும்போது பூச்சி மருந்துகளை வெண்டையில் மட்டும் தெளிக்கலாம்.
  4. பரந்து விரிந்து செயலாற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இயற்கை எதிகளின் நடமாட்டத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக புள்ளி வண்டுகள் மற்றும் கிரைசோபா இரை விழுங்கிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  5. வேகமாக வளரும் மக்காச்சோளம், சோளம் (அ) கம்பு ஆகியவற்றை வயலை சுற்றி நடுவதன் மூலம் வௌளை ஈக்களின் பாதிப்பை குறைக்கலாம்.
  6. சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 5 கிராம்ல/லிட்டர் மற்றும் டிரைக்கோடெர்மா விடி 5 கிராம்/லிட்டர் என்றளவில் இலைவழி தெளிப்பும் மற்றும் இவற்றை ஏக்கருக்கு 2 கிலோ என்றளவில் தொழு உரத்துடன் கலந்து இடுவது நோய் தாக்குதலை குறைக்க உதவும்.
  7. பேசில்லோமைசிஸ் லில்லேசினஸ் 2 கிலோவை 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு (அ) 500 கிலோ மண்புழு உரத்துடன் கலந்து இடுதல் நூற்புழு பாதிப்பை குறைக்க உதவும்.

உசாத்துணை[தொகு]

  • வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள் (நூல்) 2017 ஜூன், வேளாண்மைத் துறை, தர்மபுரி