உள்ளடக்கத்துக்குச் செல்

கத்தரிப்புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தரிப்புலம் என்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்திற்கு வடமேற்கே அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது வேதாரண்யத்திலிருந்து சுமார் 15 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

[தொகு]

முன்னொரு காலத்தில் இக்கிராமத்தில் சப்த ரிசிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இவ்வூர் சப்த ரிசிப்புலம் என வழங்கலாயிற்று. காலப்போக்கில் பேச்சு வழக்கில் இப்பெயர் மருவி கத்தரிப்புலம் என அழைக்கப்பட்டு வருகின்றது.[1]

தொழில்

[தொகு]

இவ்வூரின் முக்கிய தொழில் உழவுத் தொழில் ஆகும். நெல், தென்னை, மா, முந்திரி, சவுக்கு, வேர்க்கடலை, புளி, பயறு வகைகள் மற்றும் கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளும் இங்கு பருவ காலங்களுக்கு ஏற்ப சாகுபடி செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சப்த ரிஷிகள் பூஜித்த தலம்! - தினமணி". 27 நவம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தரிப்புலம்&oldid=3838154" இலிருந்து மீள்விக்கப்பட்டது