கதிர் ஏற்பளவினைக் குறைக்கும் வழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிர்களின் ஏற்பளவினைக் குறைக்கும் வழிகள் (Methods to reduce patient dose )

மருத்துவத் துறையில் பெறப்படும் கதிர்வீச்சின் தீய விளைவுகளைக் குறைக்கப் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வைக்கப்படும் சில பரிந்துரைகள் ஆகும். பரிந்துரைகள்:

  1. போதிய தடிமனுள்ள அலுமினிய வடிகட்டிகளைப் (Alluminium filters) பயன்படுத்தி குறைந்த ஆற்றலுள்ள பயனற்ற மென்கதிர்களை அகற்றி நோயாளி பெறும் கதிர் ஏற்பளவினைக் குறைக்க வேண்டும்.
  2. வேகமான வலுவூட்டும் திரைகளைப் ( fast screen) படத்தாளுடன் பயன்படுத்த வேண்டும்.
  3. அதிக மின் அழுத்த வேறுபாட்டினைப்(kVp) பயன்படுத்த வேண்டும்.
  4. கதிர்ப் புலத்தின் அளவு ( Field size) தேவையான அளவு மட்டுமே இருத்தல் வேண்டும். தேவையற்ற பெரிய புலம் கூடாது.
  5. மறுபடியும் படம் எடுக்க வேண்டிய சூழ்நிலையினைத் தவிர்த்து ஆரம்பத்திலேயே நல்லபடம் எடுக்க வேணடும்.
  6. விந்துச்சுரப்பி, சினையுறுப்புகள் முதலியவற்றை முடிந்த அளவு மறைக்கும் விதத்தில் ஈயக்கட்டிகளுடன் (Lead shield) காக்க வேண்டும்.

வெளியிணைப்புகள்[தொகு]