கதிர்வீச்சினைத் தொடர்ந்து குருதியில் தோன்றும் மாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதிர்வீச்சினைத் தொடர்ந்து குருதியில் தோன்றும் மாற்றம் (Changes in blood picture after acute dose) என்பது, 2 கிரே (200 இராட்) கதிர் ஏற்பளவிற்கு ஆட்பட்ட ஒருவரின் குருதியில் காணப்படும் மாற்றமாகும். இரத்தத்தில் காணும் வெள்ளை அணுக்கள் கதிர்வீச்சினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. 48 மணி நேரத்தில் மொத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடுகின்றன. ஆனால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகம் மாற்றமடைவதில்லை. இருப்பினும் 7 நாட்களுக்குப்பின் சற்றுக் குறைகின்றன. பரல்அணுக்களும் (Granulocites), சிறுதட்டுகளும் (Platelets) வெவ்வேறு அளவில் குறைகின்றன.