கதிர்மூலம்-புறப்பரப்பு தொலைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிர்மூலம்-புறப்பரப்பு தொலைவு (Source surface distance- SSD ) அல்லது கதிர்மூலம்-தோல் தொலைவு (Source -skin distance) ; தொலைக் கதிர் மருத்துவத்தில் கதிர் மூலம் பொதுவாக 80 முதல் 100 செ.மீ. தொலைவில் இருக்கும். இத் தொலைவு கோபால்ட் கருவியானால் அதன் கீழ்பகுதியிலிருந்து நோயாளியின் தோல் பகுதிவரை தேர்ந்த தொலைவு இருக்குமாறு ஒளித்தொலைவு காட்டி (Optical distance indicator ) மூலம் அல்லது அதற்குண்டான அளவுகோல் துணையுடன் அளந்து பெறலாம். நேர்கோட்டு வேக வளர்த்தியானால் (Clinac) இலக்கிலிருந்து இத்தொலைவு அளவிடப்படுகிறது. இவ்வளவு மிகத் துல்லியமாக அளவிடப்பட வேண்டியது மிக மிக முக்கியமாகும். இவ்வளவில் ஏற்படும் பிழை புற்றுத் திசுவில் ஏற்பளவினை பாதிக்கும்.