கதிரொளி மூலம் குடிநீரின் நுண்ணுயிர் நீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தோனேசியாவில் கதிரொளியில் குடிநீரை தூய்மையாக்குதல்

கதிரொளி குடிநீர் நுண்ணுயிர் நீக்கமுறை (Solar water disinfection) என்பது எவ்வித செலவுமில்லாமல் குடிநீரில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து பாதுகாப்பான குடிநீர் உருவாக்கும் முறையாகும். இம்முறை ஒரு செலவில்லாத ஒர் எளிய முறையாகும். இதற்கு தேவைப்படுவது காலி பெட் புட்டிகள் மட்டுமே.

ஒரு லிட்டர் முதல் மூன்று லிட்டர்வரை கொள்ளளவு கொண்ட நல்ல நிலையில் உள்ள நிறம் மங்காத வண்ணமல்லாத பெட் புட்டிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் நீரை நிரப்பி மூடியால் இறுக மூடி வீட்டுக்கூரையில் அல்லது நன்கு ஒளிபடக்கூடிய இடத்தில் குறைந்தது ஆறுமணிநேரம் படுக்கை வசத்தில் வைக்கவேண்டும். குறிப்பாக காலை ஓன்பது மணி முதல் மாலை மூன்று மணிவரை வைத்திருப்பது நல்லது. வெப்பம் குறைந்த காலங்களில் எட்டு மணிநேரம் வைத்திருக்கலாம். இதனால் நீரில் உள்ள நுண்ணுயிர்கள் அனைத்தும் வெயிலில் உள்ள புற ஊதாக் கதிர்களால் 99.99% வரை நீக்கப்படுகிறது. இதன் பிறகு இந்நீரை குடிக்கப் பயன்படுத்தலாம். இது காய்ச்சிக் குடிப்பதற்கு இணையானது. இதில் எவ்வித எரிபொருள் செலவும் இல்லை எனபது என்பது இதில் உள்ள சிறப்பாகும். இம் முறைக்கு பெட் புட்டிகளை பரிந்துரை செய்யப்பட்டாலும் கதிரொளியில் நீண்ட நேரம் இருப்பதால் ஞெகிழிப் புட்டிகளில் உள்ள வேதிப்பொருட்கள் நீரில் கரையலாம் என்ற ஐயம் உள்ளதால் கண்ணாடி புட்டிகளைப் பயன்படுத்துதல் நலம்.

வெளி இணைப்புகள்[தொகு]