கதிரியல் காப்பு அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதிரியல் காப்பு அலுவலர் (Radiation Safety Officer) என்பவர் அணுஆற்றல் வரன்முறைப் படுத்தும் வாரியத்தால் (Atomic Energy Regulatary Board) அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையினை நிருவகிக்கும் அமைப்பால்/நபரால் பணியமர்த்தப்பட்ட, மருத்துவ இயற்பியலில் முதுகலைப் பட்டம் ( M.Sc Medical Physics or Diploma in radiation physics ) பெற்றவராவார்.

இவர் பணியாற்றும் நிறுவனத்தின் கதிர்வீச்சுத் தூய்மைக்குப் பொறுப்பாவார். கதிர்வீச்சுக் கருவிகளைத் தேர்ந்து எடுப்பதில் நிறுவனத்திற்கு போதிய அறிவுரைகளை வழங்குவதும், சரியாக நிறுவுதலைக் கண்காணித்தலும், போதிய முன் அளவீடுகளைச் செய்தலும், தேவையான போதெல்லாம் கருவிகளின் நல்ல செயல்பாட்டினை உறுதிசெய்தலும் இவரது கடமையாகும். மருத்துவர்களுக்கும் துறைசார்ந்த மற்ற பணியாளர்களுக்கும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்புப் பற்றி போதிய தெளிவுகளை வழங்குதல், நோயாளிகளுக்கு கதிர் மருத்துவத்தில் கதிர் ஏற்பளவினை எவ்வாறு எவ்வளவு நேரம் செலுத்துவது என்பன போன்றவைகளைக் கணித்து தெரிவிப்பது போன்ற கடமைகளையும் செய்கிறார்.

கதிர்மருத்துவத் துறை, அணுக்கரு மருத்துவத்துறை, ஒன்றிற்கு மேற்பட்ட எக்சு-கதிர் கருவிகள் மற்றும் சி.டி. பயன்படுத்தும் மருத்துவ நிறுவனம் ஆகிய இடங்களிலெல்லாம் கட்டாயம் கதிரியல் காப்பு அலுவலர் நியமிக்கப்படுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.