கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)

கதிரியக்க மின்னொளி வீச்சு அல்லது ஒளிகளின் ஒத்திசைவு (Symphony of Lights, சீனம்: 幻彩詠香江) என்பது ஹொங்கொங்கில் விக்டோரியா துறைமுகத்தின் இரு மருங்கிலும் உள்ள 44 கட்டடங்களிலும் இருந்து ஒவ்வொரு நாளும் மாலை உள்ளூர் நேரம் 19:55 மணிக்கு 10 நிமிடங்கள் வரை காட்டப்படும் இசையுடன் கூடிய மின்னலங்கார கதிரியக்க மின்னொளி வீச்சாகும். இதனை ஆத்திரேலியாவின் லேசர்விசன் என்ற நிறுவனம் 44 மில்லியன் ஹொங்கொங் டொலர் செலவில் அமைத்துக் கொடுத்தது.
இது கின்னஸ் உலகசாதனைப் பதிவுப் புத்தகத்தில் உலகின் மிகப்பெரும் நிரந்தரமான ஒளி மற்றும் ஒலிக் காட்சியமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது[1].