கதிரியக்க ஓரிடத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கதிர் மருத்துவத்திற்கான கதிர் ஐசோடோப்புகள் (Radioisotop for radiotherapy) என்பன கதிர் மருத்துவத்திலும் அணுக்கரு மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் ஐசோடோப்புகளைக் குறிக்கும். அணுஉலை (Atomic reactor) அல்லது அணு அடுக்கு (Atomic pile) என்பன அணுக்கரு தொடர்வினையினைத் தொடங்கி, அதனைக் கட்டுப்பாட்டில் வைத்து, பொதுவாக மின் உற்பத்திக்கும் சில சமயங்களில் கப்பல்களை இயக்கவும் பயன்படும் காப்பான ஒரு அமைப்பாகும். இக்கருவியில் கருப்பிளவையின் போது தோன்றும் மிக அதிகமான வெப்பமானது நீர்ம அல்லது வளிம பொருட்களால் எடுத்துச் செல்லப்பட்டு, மின்னாக்கியின் சுழலியினை இயக்கப் பயன்படுகிறது. இதன் பயனாக மின்சாரம் பெறப்படுவது தெரிந்ததே.

அணுஉலைகளின் மற்றொரு முக்கிய பயன் அவைகள் மருத்துவம், தொழில்துறை, ஆய்வு, பயிர்தொழில் என பலதுறைகளிலும் அதிகம் பயன்படும் கதிர் ஐசோடோப்புகளைப் பெற உதவுகின்றன. கோபால்ட்-60, இருடியம்-192, தங்கம்-198, பாசுபரசு-32, தூலியம்-167, யுரோப்பியம்-154, -155 போல்வன நியூட்ரான்களின் மோதப்பாட்டால் கிடைக்கின்றன. சீசியம்-137 போன்றவை சில எரிகோலில் (Fuel rods) துணைப்பொருட்களாகப் பெறப்படுகின்றன. இவ்வாறாக கதிர்மருத்துவத்திற்கான ஐசோடோப்புகள் பெறப்படுகின்றன.

மேலும் சில குறுகிய கால அரைவாழ்வுடைய கதிர் ஐசோடோப்புகளான கார்பன்-11, நைட்ரசன்-13, ஆக்சிசன்-15, ஃபுளூரின்-18 போன்றவை சைக்ளோட்டிரான் உதவியுடன் பெறப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரியக்க_ஓரிடத்தான்&oldid=2228346" இருந்து மீள்விக்கப்பட்டது