கதிரியக்க ஆயுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிரியக்க ஆயுதம் (radiological weapon) என்பது கொல்ல அல்லது தகர்ப்பு விளைவை உண்டாக்க வடிவமைக்கப்பட்ட கதிரியக்க பொருளைப் பரப்பும் ஆயுதம் ஆகும்.

"அழுக்குக் குண்டு" என அறியப்பட்டது உண்மையில் அணு ஆயுதம் அற்ற, ஒரே மாதிரியான வெடிபொருட் துகளின் விளைவை ஏற்படுத்தாத ஒரு வகையாகும். இது கதிரியக்க பொருளைப் பரப்ப வெடிபொருட்களைப் பயன்படுத்துகின்றது. இது பொதுவாக அணு சக்தி உலை அல்லது கதிரியக்க மருத்துவக் கழிவுகளைப் பயன்படுத்துகின்றது.

இதன் இன்னொரு வகையான "உப்பிட்ட குண்டு" சாதாரண அணு ஆயுதத்தைவிட பாரியளவு அணு வீச்சை வெளிப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஆயுதம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரியக்க_ஆயுதம்&oldid=1476056" இலிருந்து மீள்விக்கப்பட்டது