கதிரியக்கச் சமநிலை
Jump to navigation
Jump to search
அணுக்கரு இயற்பியலில், கதிரியக்கம் காரணமாக ஒரு தனிமம் வேறு ஒரு தனிமமாக மாறும் போது புதிதாகத் தோன்றும் தனிமமும் கதிரியக்கம் உடையதாக இருக்கக் கூடும். எந்த வீதத்தில் தாய் தனிமம் அழிந்து சேய்தனிமம் தோற்றுவிக்கப்படுகறதோ அதே வீதத்தில் சேய்தனிமமும் அழியுமானால் அங்கு ஒரு சமநிலை ஏற்படுகிறது. இதுவே கதிரியக்கச் சமநிலை (radioactive equlibrium அல்லது secular equilibrium) எனப்படுகிறது.
- λ1 , λ2 -முறையே தாய் மற்றும் சேய்தனிமங்களின் அழிவு மாறிலிகள்.
- N1 , N2 -முறையே தாய் மற்றும் சேய்தனிமங்களிலுள்ள அணுக்களின் எண்ணிக்கைகள்.
இங்கு தாய் தனிமத்தின் அழிவும், அதாவது சேய்தனிமத்தின் ஆக்கமும் அது அழியும் வீதமும் சமமாக இருக்கிறது.