கதிராமங்கலம் காளஹஸ்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிராமங்கலம் காளஹஸ்தீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் கதிர்வேய்ந்த மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக காளஹஸ்தீசுவரர் உள்ளார். இறைவி ஞானாம்பிகை ஆவார். காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் வந்து இறைவனை தரிசித்துவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு வரும்போது அங்கு செல்லும் பலன் கிடைப்பதாக நம்புகின்றனர். [1] இவ்வூருக்குத் தென் காளஹஸ்தி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. [2]

அமைப்பு[தொகு]

மிருகண்டு முனிவர் மற்றும் இக்கோயிலைக் கட்டிய குலோத்துங்க சோழனின் சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. சிவமல்லிகாவனம் எனப்பெயர் பெற்ற இக்கோயிலில் சிவமல்லிகாவுக்கு தனி சிலை உள்ளது. அம்மன் சன்னதி தனியாக உள்ளது. [1]

திருவிழாக்கள்[தொகு]

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]