உள்ளடக்கத்துக்குச் செல்

கதிரவ மறைப்பு, மார்ச் 29,2025

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ச் 29, 2025-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புபகுதி மறைப்பு
காம்மா1.0405
அளவு0.9376
அதியுயர் மறைப்பு
ஆள் கூறுகள்61°06′N 77°06′W / 61.1°N 77.1°W / 61.1; -77.1
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு10:48:36
மேற்கோள்கள்
சாரோசு149 (21 of 71)
அட்டவணை # (SE5000)9563

சந்திரனின் சுற்றுப்பாதையின் ஏறும் இணைவுப் புள்ளியில் 0.9376 அளவிலான ஒரு பகுதிக் கதிரவ மறைப்பு மார்ச் 29,2025 சனிக்கிழமை அன்று நிகழ்ந்தது.[1] பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது கதிரவ மறைப்பு ஏற்படுகிறது. இதனால் பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, சூரியனின் உருவம் முற்றிலுமாகவோ பகுதியளவோ மறைந்து காணப்படும்.

வடகிழக்கு அமெரிக்கா, கிழக்கு கனடா, கிரீன்லாந்து, ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்கா, வடமேற்கு ரஷ்யாவின் சில இடங்களில் இப்பகுதி மறைப்பு காணப்பட்டது.

சந்திரனின் நிழல் நகரும் பாதை
சந்திரனின் நிழல் நகரும் பாதை

மறைப்பு விவரங்கள்

[தொகு]

இக்கதிரவ மறைப்பு பற்றிய விவரங்களைக் காட்டும் இரண்டு அட்டவணைகள் கீழே காட்டப்பட்டுள்ளன. முதல் அட்டவணை சந்திரனின் நிழல் பகுதி குறிப்பிட்ட அளவுருவை அடையும் நேரங்களை கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாவது அட்டவணை இந்த மறைப்பு தொடர்பான பல்வேறு அளவுருக்களை விவரிக்கிறது.[2]

மார்ச்சு 29, 2025 கதிரவ மறைப்பு நேரம்
நிகழ்வு நேரம் (UTC)
முதலாவது குறை நிழல் வெளித்தொடர்பாதல் 2025 மார்ச்சு 29 08:51:52.5 ஒ.பொ.நே
உச்சம் 2025 மார்ச்சு 29 10:48:36.1 ஒ.பொ.நே
மறைவுப் பாதையைச் சந்தித்தல் 2025 மார்ச்சு29 10:58:59.4 ஒ.பொ.நே
வெளிக்கோட்டுச் சந்திப்பு 2025 மார்ச்சு 29 11:47:27.0 ஒ.பொ.நே
இறுதி குறை நிழல் வெளித்தொடர்புறல் 2025 மார்ச்சு 29 12:44:54.0 ஒ.பொ.நே
மார்ச்சு 29, 2025 மறைப்பு தொடர்பான அளவுருக்கள்
அளவுரு பெறுமதி
Eclipse magnitude 0.93760
Eclipse obscuration 0.93057
Gamma 1.04053
Sun right ascension 00h33m03.1s
Sun declination +03°33'55.0"
Sun semi-diameter 16'01.1"
Sun equatorial horizontal parallax 08.8"
Moon right ascension 00h31m00.8s
Moon declination +04°29'34.1"
Moon semi-diameter 16'39.4"
Moon equatorial horizontal parallax 1°01'07.8"
ΔT 71.9 s

மறைப்புக் காலம்

[தொகு]

இந்தக் கதிரவ மறைப்பு, ஒரு மறைப்புப் பருவத்தின் போது நிகழ்கிறது. ஒரு மறைப்புப் பருவம் என்பது தோராயமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிகழும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு (அல்லது எப்போதாவது மூன்று) மறைவுப் பருவங்கள் மட்டுமே நிகழ்கின்றன. மேலும், ஒவ்வொரு பருவமும் சுமார் 35 நாட்கள் நீடித்துப் பிறகு 173 நாட்கள் கழித்தே மீண்டும் நிகழ்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இரண்டு முழு மறைப்புப் பருவங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு மறைப்புப் பருவத்திலும் இரண்டு அல்லது மூன்று மறைப்புகள் நேர்கின்றன. கீழே உள்ள வரிசையில், ஒவ்வொரு மறைப்பும் அடுத்தடுத்த பதினான்கு நாட்களுக்கு ஒரு முறை நிகழ்கின்றது.

மார்ச் 2025 மறைப்பு
மார்ச் 14 இறங்கு முனை (முழு நிலவு)

மார்ச் 29 ஏறுவரிசை (புதிய நிலவு)

முழு சந்திர மறைப்பு - சந்திர சாரோசு 123
பகுதி சூரிய மறைப்பு - சூரிய சாரோசு 149

படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "March 29, 2025 Partial Solar Eclipse". timeanddate. Retrieved 13 August 2024.
  2. "Partial Solar Eclipse of 2025 Mar 29". EclipseWise.com. Retrieved 13 August 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவ_மறைப்பு,_மார்ச்_29,2025&oldid=4244511" இலிருந்து மீள்விக்கப்பட்டது