கதிரடி இயந்திரம்
கதிரடி கருவி (Threshing machine) என்பது தானியங்களில் இருந்து கதிரை பிரிக்கும் கருவி ஆகும். சில இயந்திரங்கள் உமி, தவிடு ஆகியவற்றையும் நீக்கி விதையை மட்டும் தரும். இந்தவகை இயந்திரங்கள் பயிர்கள் அறுவடையின் போது வயல்களில் ஓட்டிச் செல்லப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன. இதனால் அதிக அளவில் நேரம் மிச்சமாகிறது. இத்தகைய இயந்திரங்கள் பிரித்தெடுக்கும் தானியக் கதிர்களை கால்நடைகள் உண்பதில்லை என பொதுவாக கருத்து உண்டு. இந்த இந்தந்திரங்கள் பெரும்பாலும் டீசல் எண்ணெயில் இயங்குபவை. இவை மனித மற்றும் கால்நடைகளின் உழைப்பினை மிகவும் குறைத்தன. இந்த இயந்திரங்களின் வருகையால் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இந்த வகை இயந்திரங்களில் இருந்து வெளியேறும் புகை நச்சுத்தன்மை உடையது. 19-ஆம் நூற்றாண்டு வரை விவசாயிகள் கைகளால் தானியங்களில் இருந்து கதிரைப் பிரித்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nazzir, Wellons (2008). A Farewell to Alms: A Brief Economic History of the World. Cesar Tarrant MIddle School. p. 286. ISBN 978-0-691-12135-2.