கதியம் காவ்யா
கதியம் காவ்யா Kadiyam Kavya | |
|---|---|
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | பசுனூரி தயாகர் |
| தொகுதி | வாரங்கல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 ஏப்ரல் 1983 வாரங்கல் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பிற அரசியல் தொடர்புகள் | பாரத் இராட்டிர சமிதி |
| துணைவர் | முகமது நசீருல்லா சேக் (திருமணம்:26 ஆகத்து 2007) |
| பிள்ளைகள் | 2 மகள்கள் |
| பெற்றோர் | கதியம் சிறீ அரி கதியம் வினயராணி |
| வாழிடம் | வீ.எண்.2-7-1041/3, சாலை எண்.2 கானகதுர்கா காலனி, வடேபள்ளி, அனாம்கொண்டா மண்டலம், அனாம்கொண்டா, வாரங்கல், தெலங்கானா |
| முன்னாள் மாணவர் | உசுமானியா மருத்துவக் கல்லூரி, ஐதராபாத்து |
| மூலம்: | |
கதியம் காவ்யா (Kadiyam Kavya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தெலங்காணா மாநிலத்திலுள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான வாரங்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மூத்த அரசியல்வாதியான கதியம் சிறீ அரியின் மகளாக அறியப்படுகிறார்.[2][3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]காவ்யா தனது தந்தை கதியம் சிறீ அரியின் அரசியல் மரபால் ஈர்க்கப்பட்டு, தனது தொண்டு நிறுவனமான கதியம் அறக்கட்டளை மூலம் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தீவிரமாக இருந்தார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான பசுனூரி தயாகருக்குப் பதிலாக வாரங்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாரத் இராட்டிர சமிதி கட்சி காவ்யாவை பரிந்துரைத்தது. வேட்புமனுவை அறிவித்த பிறகு, இவர் போட்டியில் இருந்து விலக முடிவு செய்தார். பின்னர் மார்ச் 31ஆம் தேதியன்று முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொறுப்பாளர் தீபா தாசுமுன்சி முன்னிலையில் காவ்யா காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.[4]
அனைத்திந்திய காங்கிரசு குழுவின் மத்திய தேர்தல் குழு ஏப்ரல் 1ஆம் தேதியன்று கதியம் காவ்யாவின் வேட்புமனுவை அறிவித்தது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரசு கட்சியின் காவ்யா 5,81,294 வாக்குகள் (45.85%) பெற்று தீர்க்கமான வெற்றியைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பாரதிய சனதா கட்சியின் ஆரூரி ரமேசு 3,60,955 வாக்குகள் (28.47%) பெற்று இரண்டாவது இடத்தையும், பாரத ராசுட்டிர சமிதியின் வேட்பாளர் மரப்பள்ளி சுதீர் குமார் 2,32,033 வாக்குகள் (18.3%) பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தார். வாரங்கல் நாடாளுமன்ற தொகுதியில் கதியம் காவ்யா தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய சனதா கட்சியின் ஆரூரி ரமேசை தோற்கடித்து 2,20,339 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India (4 June 2024). "2024 Warangal Loksabha Election Results" இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604142022/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2915.htm. பார்த்த நாள்: 4 June 2024.
- ↑ Reddy, R. Ravikanth (31 March 2024). "Kadiyam Srihari, daughter Kavya desert BRS, join Congress". The Hindu. https://www.thehindu.com/elections/lok-sabha/kadiyam-srihari-daughter-kavya-desert-brs-join-congress/article68012431.ece.
- ↑ India Today (13 July 2024). "Doctors | Healthy corps" (in en) இம் மூலத்தில் இருந்து 9 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241109153202/https://www.indiatoday.in/magazine/cover-story/18th-lok-sabha-the-debutants/story/20240722-doctors-healthy-corps-2565856-2024-07-13. பார்த்த நாள்: 9 November 2024.
- ↑ The New Indian Express (1 April 2024). "Former Telangana deputy CM Kadiyam, Kavya join Congress" (in en). https://www.newindianexpress.com/states/telangana/2024/Apr/01/former-telangana-deputy-cm-kadiyam-kavya-join-congress.