கதிடல் மஞ்சப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதிடல் மஞ்சப்பா
கதிடல் மஞ்சப்பா
மைசூரின் மூன்றாவது முதலைமைச்சர்
பதவியில்
19 ஆகத்து 1956 – 31 அக்டோபர் 1956
ஆளுநர் ஜெயச்சாமராஜா உடையார்
முன்னவர் கே. அனுமந்தையா
பின்வந்தவர் எஸ். நிஜலிங்கப்பா
தனிநபர் தகவல்
பிறப்பு 1908
கதிடல், தீர்த்தஅள்ளி, சிவமொக்கா, கருநாடகம், இந்தியா
இறப்பு 1992
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

கதிடல் மஞ்சப்பா (Kadidal Manjappa)(1908-1992) 1956 இல் (19 ஆகத்து 1956 - 31 அக்டோபர் 1956) ஒரு குறுகிய காலத்திற்கு கர்நாடகாவின் மூன்றாவது முதலமைச்சராக இருந்தார் (அப்போதைய மைசூர் மாநிலம் ).

சொந்த வாழ்க்கை[தொகு]

சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை வளமான தீர்த்தஅள்ளி வட்டத்திலுள்ள கதிடல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். [1] மைசூர் மகாராஜாவின் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் புனே சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.

அரசியல் ஈடுபாடு[தொகு]

மஞ்சப்பா ஒரு சுதந்திர போராட்ட வீரராகவும், ஒரு உண்மையான காந்தியராக இருந்தார். இவர் பொது வாழ்க்கையில் மாநிலத்தில் பல போராட்டங்களை வழிநடத்தினார். 32 ஆண்டுகளாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களில் அமைச்சராகவும் பணியாற்றினார். 1950களின் முற்பகுதியில் நில சீர்திருத்தங்களைத் தொடங்குவதில் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். குத்தகை சட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக இவர் நினைவுகூரப்படுகிறார். இனாம் ஒழிப்புச் சட்டம் போன்ற பல முற்போக்கான செயல்கள் பார்வை காரணமாக உருவானது. இவர் 1976இல் நெருக்கடி நிலை நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் சேர்ந்தார். பின்னர், பாபு ஜெகசீவன்ராமின் "ஜனநாயகத்திற்கான காங்கிரசின்" கர்நாடக மாநிலப் பிரிவின் தலைவராக இருந்தார். [2] [3]

இலக்கியம்[தொகு]

மஞ்சப்பா மூன்று புதினங்களையும், 'நானாசகாத கனாசு' (ஒரு உண்மையற்ற கனவு) என்ற சுயசரிதையும் எழுதியுள்ளார். இவரது மனைவி திருமதி இலட்சுமிதேவியும் ஒரு ஆசிரியராக இருந்தார்.

மரியாதை[தொகு]

இவரது நினைவாக பெங்களூரிலுள்ள முன்னாள் இலாங்ஃபோர்ட் சாலை "கதிடல் மஞ்சப்பா சாலை" என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது நூற்றாண்டு கொண்டாட்டங்கள் 2008 இல் நடைபெற்றது. [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Kadidal Manjappa was a true Gandhian’". The Hindu. 30 December 2008. Archived from the original on 26 ஜனவரி 2013. https://archive.today/20130126120941/http://www.hindu.com/2008/12/30/stories/2008123051440300.htm. 
  2. "Profile and Biography of Kadidal Manjappa". Karnataka Spider. 2020-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-14 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kadidal Manjappa". Vokkaligara Sangha.
  4. "Remembering Kadidal Manjappa". This Week Bangalore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிடல்_மஞ்சப்பா&oldid=3547736" இருந்து மீள்விக்கப்பட்டது