கதாவோ குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கதாவோ குகை
Gadao's Cave
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
கதாவோ குகை உருவ வரைபடங்கள்.
அண்மை
நகரம்:
குவாம், இனராசன் கிராமம்
பரப்பளவு: 0.1 ஏக்கர்கள் (0.040 ha)
நிர்வாக அமைப்பு: தனியார்
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
நவம்பர் 19, 1974
தே.வ்.இ.ப 
குறிப்பெண்#:
74002309[1]

கதாவோ குகை (Gadao's Cave) என்பது அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவிலுள்ள ஒரு பாறை ஓவியத் தளமாகும். குவாம் தீவின் தென்கிழக்கு கடற்கரையிலுள்ள இனராசன் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த குகையில் சுமார் 50 உருவ வரைபடங்கள் உள்ளன. பவள சுண்ணாம்பும் மரம் சாறும் பயன்படுத்தி இவ்வுருவங்கள் வரையப்பட்டுள்ளன. மனித குச்சி உருவங்கள் பொருட்களை சுமந்து செல்வதாகத் தெரியும் இங்குள்ள இரண்டு படங்கள் மிகவும் அசாதாரணமான படங்களாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றை யார், எப்போது வரைந்தார்கள், அவற்றின் முக்கியத்துவம் என்ன என்று அறியப்படவில்லை. [2]

கதாவோ குகை 1974 ஆம் ஆண்டில் வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் பட்டியலிடப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "National Register Information System". National Register of Historic Places. National Park Service (2010-07-09).
  2. "National Asian-Pacific Heritage Month: Guam". National Park Service. பார்த்த நாள் 2015-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதாவோ_குகை&oldid=3035744" இருந்து மீள்விக்கப்பட்டது