கதானி கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதானி கடற்கரை

கதானி கடற்கரை (Gadani Beach) அரபிக்கடலில் உள்ள ஒரு கடற்கரையாகும். பாக்கித்தான் நாட்டின் பலுசிசுத்தான் மாநிலம் அப் மாவட்டத்தில் பாயும் அப் நதிக்கும் கதானி நகரத்திற்கும் அருகில் அமைந்துள்ளது.[1] கராச்சி நகரத்திற்கு வடமேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரை ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. கதானி என்ற மீன்பிடி கிராமத்தின் பெயரால் கடற்கரை அழைக்கப்படுகிறது.

கதானியில் உள்ள கப்பல் உடைக்கும் முற்றம்

உலகத்தின் மூன்றாவது பெரிய கப்பல் உடைக்கும் முற்றமான கதானி கப்பல் உடைப்பு முற்றம் கதானி கடற்கரையில் அமைந்துள்ளது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Correspondent, The Newspaper's Staff (2022-02-03). "Lasbela bifurcated, Hub made new district". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.

புற இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதானி_கடற்கரை&oldid=3442652" இலிருந்து மீள்விக்கப்பட்டது