கதலிவனேஸ்வரர் கோவில், பொன்னமராவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதலிவனேஸ்வரர் கோவில், பொன்னமராவதி என்பது தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின், பொன்னமராவதி வட்டம் அருகே 7 கி.மி தொலைவில் திருக்களம்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது இக்கோவில். இவ்வூரின் பெயர் திருக்குறும்பூர் எனக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. பிறகு இது நாளடைவில் மருவி திருக்களம்பூர் ஆனது.[1]

வரலாறு[தொகு]

இக்கோவில் 12-13ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.

பெயர்க் காரணம்[தொகு]

கதலி என்றால் வாழை. இங்கு வாழை மரங்கள் இருப்பதால் இவர் கதலிவனேஸ்வரர் என அழைக்கபடுகிறார்.

தெய்வங்கள்[தொகு]

கதலிவனேஸ்வரர் என்றால் தீராத நோய்களை தீர்ப்பவர் என பொருள் படும். வைத்தீஸ்வரரும் காமாட்சி அம்மனும் இங்கு வீற்று இருக்கிறார்கள்.

கோவிலின் சிறப்பு[தொகு]

பாண்டிய மன்னன் ஒருவர் இவ்வூர் வழியே குதிரையில் வரும் பொழுது குதிரையின் கால் குளம்பு ஒரு கல்லில் பட்டு இரத்தம் வரவே அங்கு தோண்டி பார்த்தால் சிவலிங்கம் தென்பட்டது. பின்னர் அம்மன்னன் சிவ பெருமானுக்குக் கோவில் கட்டி வழிப்பட்டான். ஆகவே இத்தலம் திருக்குளம்பூர் ஆனது.

இக்கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் அபூர்வக் கதலி வாழை வளர்கின்றது. இம்மரத்தின் பழங்களை யாரும் உண்பது இல்லை. இக்கனிகள் சுவாமிக்குத் திருமுழுக்கு செய்யப்படும். இம்மரத்தின் அடியே பாறைகள் இருப்பினும், செழிப்பாக வளர்ந்து வருகிறது. இவ் வாழை மரக்கன்றுகளை வேறு எங்கு எடுத்துசென்று நட்டாலும் வளருவது இல்லை.

ஜேஷ்டாதேவி வழிபாடு[தொகு]

இக்கோவில் பின் வரும் காலத்தில் புதுப்பித்து இருக்க வேண்டும். ஜேஷ்டாதேவி எனில் நல்லவர்களை காப்பவள், தீயவர்களை தண்டிப்பவள் என பொருள்படும்.

சிற்பங்கள் நிறைந்த கோவில்[தொகு]

இங்குள்ள இலிங்கோத்பவர் சிற்பம் . இங்குக் கோவில் முழுவதும் அழகிய சிற்பங்களைக் காணலாம்.

கல்வெட்டுக்கள்[தொகு]

இது சடைய வர்மன் காலத்தை சேர்ந்த்து எனவும்,1119 இல் திருக்களம்பூர் விக்கிரம பாண்டிய நல்லூர் என்ற பெயரில் இவ்வூர் அழைக்கப்பட்டதாகவும் கல்வெட்டு உள்ளதாம்.

திருவிழா[தொகு]

வைகாசி - விசாகம் வரை 10 நாட்களும்,சித்திரை விழா, நவராத்திரி விழா, தைப்பூச விழா நடைபெறும்.

கோவில் திறப்பு நேரம்[தொகு]

காலை 6-12 மணி வரை மற்றும் மாலை 4.30- 8.30 வரை

மேற்கோள்கள்[தொகு]