கதர் கலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதர் சதி (Ghadar Mutiny) என்றும் அழைக்கப்படும் கதர் கலகம், இது இந்தியாவில் பிரித்தானிய இராச்சியத்தை முடிவுக்கு வர 1915 பிப்ரவரியில் பிரித்தானியஇந்திய ராணுவத்தில் பான்-இந்திய கலகத்தைத் தொடங்குவதற்கான திட்டமாகும். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில், அமெரிக்காவின் கதர் கட்சி, ஜெர்மனியில் பெர்லின் குழு, பிரித்தானிய இந்தியாவில் இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி இயக்கங்கள், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மூலம் ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் ஆகியவற்றுக்கிடையே இந்த சதி உருவானது. இந்த சம்பவம் அதன் பெயரை வட அமெரிக்க கதர் கட்சியிலிருந்து பெற்றது. கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பஞ்சாபி சமூகத்தின் உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் மிக முக்கியமாக பங்கேற்றனர். முதலாம் உலகப் போரின்போது பிரித்தானிய இராச்சியத்தின் மீது பான்-இந்திய கிளர்ச்சியைத் தொடங்க 1914க்கும் 1917 க்குமிடையில் வடிவமைக்கப்பட்ட மிகப் பெரிய இந்து-ஜெர்மன் கலகத்தின் பல திட்டங்களில் இது மிக முக்கியமானது. [1] [2] [3] முக்கிய மாநிலமான பஞ்சாபில் கலகம் தொடங்க திட்டமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வங்காளத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கலகம் ஏற்பட்டது. சிங்கப்பூர் வரை இந்திய அலகுகள் கிளர்ச்சியில் பங்கேற்க திட்டமிடப்பட்டன. ஒருங்கிணைந்த உளவுத்துறை மூலமும், காவல்துறை மூலமும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. பிரிட்டிசு உளவுத்துறை கனடாவிலும் இந்தியாவிலும் கதரியக்கத்தில் ஊடுருவியது. பஞ்சாபில் திட்டமிட்ட எழுச்சியைத் தொடங்குவதற்கு முன்னர் ஒரு உளவாளியால் கடைசி நிமிடத்தில் தடுக்கப்பட்டது. முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கலகத்தின் அச்சுறுத்தல் பற்றிய புலனாய்வு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பல முக்கியமான போர்க்கால நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. இதில் இங்ரெஸ் இந்தியச் சட்டம், 1914, வெளிநாட்டினர் சட்டம் 1914, இந்திய பாதுகாப்பு சட்டம் 1915 ஆகியவை அடங்கும் . இந்த சதியைத் தொடர்ந்து முதல் லாகூர் சதி விசாரணை, பெனாரஸ் சதி விசாரணை ஆகியவை பல இந்திய புரட்சியாளர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. மேலும் பலர் நாடுகடத்தப்பட்டனர். யுத்தம் முடிவடைந்த பின்னர், இரண்டாவது கதரியக்க எழுச்சி குறித்த அச்சம் ரௌலட் சட்டங்களின் பரிந்துரைகளுக்கு வழிவகுத்தது. பின்னர் ஜாலியன்வாலா பாக் படுகொலையில் முடிந்தது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

 • Bose, A. C. (1971), Indian Revolutionaries Abroad, 1905–1927, Patna: Bharati Bhawan, ISBN 978-81-7211-123-6.
 • Brown, Giles (Aug 1948). "The Hindu Conspiracy, 1914–1917". The Pacific Historical Review (University of California Press) 17 (3): 299–310. doi:10.2307/3634258. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-8684. .
 • Chhabra, G. S. (2005), Advance Study in the History of Modern India, 2: 1803–1920, Lotus Press, ISBN 978-81-89093-07-5, 17 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 • Deepak, B. R. (1999). "Revolutionary Activities of the Ghadar Party in China". China Report (Sage Publications) 35 (4): 439. doi:10.1177/000944559903500402. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-4455. .
 • Fischer-Tiné, Harald (2007), "Indian Nationalism and the 'world forces': Transnational and diasporic dimensions of the Indian freedom movement on the eve of the First World War", Journal of Global History, Cambridge University Press (2): 325–344, ISSN 1740-0228.
 • Gupta, Amit K. (Sep–Oct 1997). "Defying Death: Nationalist Revolutionism in India, 1897–1938.". Social Scientist 25 (9/10): 3–27. doi:10.2307/3517678. பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-0293. .
 • Hoover, Karl (May 1985). "The Hindu Conspiracy in California, 1913–1918". German Studies Review (German Studies Association) 8 (2): 245–261. doi:10.2307/1428642. பன்னாட்டுத் தர தொடர் எண்:0149-7952. .
 • Hopkirk, Peter (2001), On Secret Service East of Constantinople, Oxford Paperbacks, ISBN 978-0-19-280230-9.
 • Ker, J. C. (1917), Political Trouble in India 1907–1917, Calcutta. Superintendent Government Printing, India, 1917. Republished 1973 by Delhi, Oriental Publishers, OCLC: 1208166.
 • Kuwajima, Sho (1988), "First World War and Asia — Indian Mutiny in Singapore (1915)", Journal of Osaka University of Foreign Studies, Osaka University of Foreign Studies, 69: 23–48, ISSN 0472-1411.
 • Majumdar, Bimanbehari (1967), Militant Nationalism in India and Its Socio-religious Background, 1897–1917, General Printers & Publishers.
 • Plowman, Matthew (Autumn 2003), "Irish Republicans and the Indo-German Conspiracy of World War I", New Hibernia Review, Center for Irish Studies at the University of St. Thomas, 7 (3): 81–105, doi:10.1353/nhr.2003.0069, ISSN 1534-5815.
 • Popplewell, Richard J. (1995), Intelligence and Imperial Defence: British Intelligence and the Defence of the Indian Empire 1904–1924, Routledge, ISBN 978-0-7146-4580-3.
 • Puri, Harish K. (Sep–Oct 1980), "Revolutionary Organization: A Study of the Ghadar Movement", Social Scientist, 9 (2/3): 53–66, doi:10.2307/3516925, ISSN 0970-0293, JSTOR 3516925.
 • Qureshi, M. Naeem (1999), Pan-Islam in British Indian Politics: A Study of the Khilafat Movement, 1918–1924, Brill Academic Publishers, ISBN 978-90-04-11371-8.
 • Sareen, Tilak R. (1995), Secret Documents On Singapore Mutiny 1915, Mounto Publishing House, New Delhi, ISBN 978-81-7451-009-9.
 • Sarkar, Sumit (1983), Modern India, 1885–1947, Delhi: Macmillan, ISBN 978-0-333-90425-1.
 • Strachan, Hew (2001), The First World War, I: To Arms, USA: Oxford University Press, ISBN 978-0-19-926191-8.
 • Ward, W. P. (2002), "White Canada Forever: Popular Attitudes and Public Policy Toward Orientals in British Columbia", McGill-Queen's Studies in Ethnic History (3 ed.), McGill-Queen's University Press, ISBN 978-0-7735-2322-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதர்_கலகம்&oldid=3039184" இருந்து மீள்விக்கப்பட்டது