கதம்தலா, அந்தமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதம்தலா (Kadamtala) என்பது அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள நடு அந்தமான் தீவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 744209 ஆகும்.

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகளின் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் அமைந்திருக்கும் ரங்காட் தாலுக்காவில் கதம்தலா கிராமம் இருக்கிறது.[1]

ரங்காட் நகருக்கு தென்மேற்கில் 24 கிலோமீட்டர் மற்றும் , போர்ட் பிளேர் நகருக்கு நேர்கோட்டு வடக்கில் 77 கிலோமீட்டர் தொலைவில், மகா அந்தமான் பெருவழிச் சாலையில் அமைந்துள்ள கதம்தலா நிலப்பரப்பு, கடலுடன் கலக்கும் ஓம்பிரே நீர் சந்தியை ஒரு ஓதக்கால்வாய் மூலம் இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதம்தலா,_அந்தமான்&oldid=1999062" இருந்து மீள்விக்கப்பட்டது