உள்ளடக்கத்துக்குச் செல்

கண் சதை வளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண் சதை வளர்ச்சி
சிறிய அளவிலான கண் சதை வளர்ச்சி
பெரிய அளவிலான கண் சதை வளர்ச்சி

கண் சதை வளர்ச்சி (Pterygium) கண் சதை என்பது இளம் சிவப்பு நிறத்தில், முக்கோண வடிவத்தில் கருவிழிப் பகுதியில் வளரும் திசு ஆகும். [1]கண்ணின் உள் ஓரத்தில் வளரும் கண் சதையானது கண்ணின் நடுப்பகுதியை நோக்கி நீண்டுச் செல்லும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மெல்ல வளர்ந்தபடியே இருக்கும். சிலருக்கு ஓரளவு வளர்ந்து பிறகு நின்று விடும். வெகு சிலருக்கு கருவிழி பாப்பாவை மறைத்தபடி வளர்ந்து, பார்வையைப் பாதிக்கும்.

காரணங்கள்[தொகு]

கண் சதை தோன்றுவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அதிகமாக சூரிய ஒளி, மணல், காற்று இருக்கும் இடங்களில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு கண் சதை உண்டாகும் அபாயம் அதிகம். பொதுவாக, 20-40 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு உண்டாகும். இதைத் தவிர்க்க, நேரடி சூரிய ஒளியில் நீண்டநேரம் இருக்க நேரிட்டால் கருப்பு கண்ணாடி அல்லது தொப்பி அணிய வேண்டும்.

சிகிச்சை[தொகு]

கண் சதை வளர்ச்சியால் பார்வை தடைபட்டால்தான் அறுவை சிகிச்சை பரிந்துரைக்க்கப்படுகிறது. மற்ற நேரங்களில் சொட்டு மருந்துகள் பயன்படும். இது கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பைக் குறைக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_சதை_வளர்ச்சி&oldid=3852312" இலிருந்து மீள்விக்கப்பட்டது