கண் கண்ட தெய்வம்
கண் கண்ட தெய்வம் | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். வி. ரங்கராவ் பத்மினி எஸ். வி. சுப்பையா நாகேஷ் |
ஒளிப்பதிவு | ஆர். சம்பத் |
படத்தொகுப்பு | ஆர். தேவன் |
கலையகம் | கமால் பிரதர்ஸ் |
விநியோகம் | ஜெய் மாருதி கம்பைன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 15, 1967 |
ஓட்டம் | 174 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண் கண்ட தெய்வம் (Kan Kanda Deivam) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பைய்யா, பத்மினி, நாகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இத்திரைப்படம் 15 செப்டம்பர் 1967 இல் வெளியிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் பாந்தவியாலு (1968) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- நில உரிமையாளராக எஸ். வி. ரங்கராவ்
- நில உரிமையாளரின் தம்பி மனைவியாக பத்மினி
- நில உரிமையாளரின் தம்பியாக எஸ். வி. சுப்பையா
- வழக்கறிஞராக நாகேஷ்
- பக்கத்து வீட்டு சாமியாராக சித்தூர் வி. நாகையா
- குற்றவாளியாக ஓ. ஏ. கே. தேவர்
- குற்றவாளியின் உதவியாளராக எஸ். ராமராவ்
- வேலைக்காரனாக சிவகுமார்
- நீதிபதியாக எஸ். வி. சகஸ்ரநாமம்
- மூத்த ம்கனாககள்ளபார்ட் நடராஜன்
- நடு மகனாக மகாரன்
- இளைய மகனாக ஏ. வீரப்பன்
- மகளாக விஜயராணி
தயாரிப்பு
[தொகு]கமல் பிரதர்ஸ் தயாரிப்பில்[4] கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.சம்பத்தும், படத்தொகுப்பாளராக ஆர்.தேவன் இருந்தனர். படத்தின் சில பாடல் காட்சிகள் விவசாயப் பின்னணியில் படமாக்கப்பட்டது. படத்தின் நீளம் 4845 மீட்டர் இருந்தது.
இசையமைப்பு
[தொகு]உடுமலை நாராயண கவி மற்றும் வாலியின் வரிகளுக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]
பாடல் வரிகள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி" | பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன் | ||||||||
2. | "வாழ்க்கை என்பது ஜாலி" | ஏ. எல். ராகவன், எஸ். சி. கிருஷ்ணன், பொன்னுசாமி | ||||||||
3. | "தென்ன மரத்திலே" | டி. எம். சௌந்தரராஜன் | ||||||||
4. | "ஆண்டவனே சாமி" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா மற்றும் குழுவினர் |
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]கண் கண்ட தெய்வம் திரைப்படம் 1967 செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது. ஜெய் மாருதி கம்பைன்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Kankanda Deivam Tamil Film EP Vinyl Record by K V Mahadevan". Mossymart. Archived from the original on 24 October 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2022.
- ↑ Cowie, Peter; Elley, Derek (1977). World Filmography: 1967. Fairleigh Dickinson University Press. p. 267.
- ↑ "கண் கண்ட தெய்வம்". Kalki. 1 October 1967. p. 43. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ Randor Guy (1 June 2017). "Kan Kanda Deivam (1967)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170727101300/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/kan-kanda-deivam-1967/article18686080.ece.
- ↑ "1967_ கண்கண்ட தெய்வம்- கமால் பிரதர்ஸ்" [1967_ Kan Kanda Deivam- Kamal Brothers]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 27 July 2017. பார்க்கப்பட்ட நாள் 27 July 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- 1967 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- எஸ். வி. ரங்கராவ் நடித்த திரைப்படங்கள்
- சித்தூர் வி. நாகையா நடித்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். வி. சகஸ்ரநாமம் நடித்த திரைப்படங்கள்