உள்ளடக்கத்துக்குச் செல்

கண்வில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெவ்வேறு வகையான கண்வில்லைகள்.

கண்வில்லை என்பது, தொலைநோக்கிகள், நுண்நோக்கிகள் போன்ற ஒளியியல் கருவிகளில் பயன்படுகின்ற ஒருவகைக் கண்ணாடி வில்லை ஆகும். மேற்படி கருவிகளூடாகப் பார்க்கும்போது கண்ணுக்கு அண்மையில் மேற்சொன்ன வகை வில்லைகள் இருப்பதால், கண்வில்லை என்னும் பெயர் ஏற்பட்டது. கருவிகளில் உள்ள பொருள்வில்லை பார்க்கப்படும் பொருளில் இருந்து வரும் ஒளியைச் சேகரித்து அடுத்த பக்கத்தில் ஒரு விம்பத்தை உருவாக்கும். கண்வில்லை இந்த விம்பத்தைப் பெருப்பித்துக் காட்டுகிறது. கிடைக்கும் உருப்பெருக்கத்தின் அளவு கண்வில்லையின் குவியத் தூரத்தில் தங்கியுள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. (Harrington 2011, ப. 181)
  2. "Eyepieces". astro-tom.com.
  3. வார்ப்புரு:Cite periodical
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்வில்லை&oldid=3889775" இலிருந்து மீள்விக்கப்பட்டது