கண்வளைய சிலந்திப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்வளைய சிலந்திப்பிடிப்பான்
Spectacled-spiderhunter.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: நெக்டாரினிடே
பேரினம்: அராக்னோதெரா
இனம்: அ. பிளவிகாசுடர்
இருசொற் பெயரீடு
அராக்னோதெரா பிளவிகாசுடர்
எய்டன், 1839

கண்வளைய சிலந்திப்பிடிப்பான்[2] (Spectacled spiderhunter)(அராக்னோதெரா பிளவிகாசுடர்) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற் வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது தேன்சிட்டுக் குடும்பத்தில் மிகப்பெரிய பறவையாக கண்வளைய சிலந்திப்பிடிப்பான் உள்ளது. இந்த சிற்றினப் பறவையின் உடல் நீளம் சுமார் 22 cm (8.7 in) மற்றும் உடல் எடை 38.4 to 49 g (1.35 to 1.73 oz) வரை உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Arachnothera flavigaster". IUCN Red List of Threatened Species 2016: e.T22718112A94567832. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718112A94567832.en. https://www.iucnredlist.org/species/22718112/94567832. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. https://ebird.org/species/spebar1
  3. Cheke, R. and C. Mann (2020).