உள்ளடக்கத்துக்குச் செல்

கண்மாலா பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்மாலா பாலம்

கண்மாலா பாலம் (Kanamala Bridge) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கண்மாலாவில் அமைந்துள்ளது. கோட்டயம் மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எருமேலி ஊராட்சிக்கு உட்பட்ட இப்பாலம் ஒரு கற்காரை பாலமாகும். கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களை பம்பை நதி வழியாக இணைக்கிறது. 23 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று பாலம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. புகழ்பெற்ற சபரிமலை கோயில் இங்கிருந்து சுமார் 33 கிமீ தொலைவில் உள்ளது. முக்கியமாக மண்டல-மகரவிளக்கின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், குறுகிய தரைப்பாலத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும் கண்மாலா பாலம் கட்டப்பட்டது.[1][2]

கண்மாலா பாலம் 170 மீ (560 அடி) நீளமும் 11.23 மீ (36.8 அடி) அகலமும் கொண்டதாகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மாலா_பாலம்&oldid=3741837" இலிருந்து மீள்விக்கப்பட்டது