கண்மாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்மாய் (About this soundஒலிப்பு ) என்பது குளம், ஏரி போன்ற ஒரு நீர்நிலை. இது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது.

கண்மாய் நீர் மக்களுக்கு குடிக்கவும், வேளாண்மைக்கும் பயன்படுகிறது. மேலும் சில கண்மாய்கள் பறவைகள் மிகுந்து வாழ ஏற்றதாக உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேத்தமங்கலம் கண்மாய் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய கண்மாய்கள் சில கிலோமீட்டர் வரை நீள, அகலங்களைக் கொண்டிருக்கும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர். எஸ். கண்மாயின் நீளம் 19.8 கி.மீ, அகலம் 6 கி.மீ.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மாய்&oldid=2678682" இருந்து மீள்விக்கப்பட்டது