உள்ளடக்கத்துக்குச் செல்

கண்பத்சிங் வெஸ்டாபாய் வாசவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்பத்சிங் வாசவா
15வது சட்டப் பேரவைத் தலைவர் குசராத்து சட்டப்பேரவை
பதவியில்
10 நவம்பர் 2014 – 22 ஆகஸ்ட் 2016
முன்னையவர்வாஜுபாய் வாலா
பின்னவர்இராமன்லால் வோரா
பதவியில்
23 பிப்ரவரி 2011 – 26 திசம்பர் 2012
முன்னையவர்அசோக் பட்
பின்னவர்வாஜுபாய் வாலா
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2002 (மூன்று முறை)
தொகுதிமங்க்ரோல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1971 (1971-06-01) (அகவை 53)
வாடி , சூரத் மாவட்டம், குசராத்து, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நீலம் வாசவா
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
As of 20 ஜனவரி, 2015
மூலம்: Biodata

கண்பத்சிங் வெஸ்டாபாய் வாசவா (Ganpatsinh Vestabhai Vasava) ஓர் இந்திய அரசியல்வாதியும் குஜராத் அரசாங்கத்தில் அமைச்சருமாவார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் 2014 முதல் 2016 வரை இந்தியாவில் குஜராத் சட்டப் பேரவைத் தலைவராக இருந்தார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் சூரத் மாவட்டத்தில்]] மங்க்ரோல் சட்டமன்றத்தொகுதியிலிருந்து 2002, 2007, 2012 ஆகிய தேர்தல்களில் மூன்று முறை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகராகவும், சட்டசபை வரலாற்றில் இளைய சபாநாயகராகவும் பணியாற்றிய முதல் பழங்குடித் தலைவராவார். இவர் பிப்ரவரி 2011இல் சட்டப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திசம்பர் 2012 வரை பணியாற்றினார்.[2] மேலும், திசம்பர் 2012 முதல் நவம்பர் 2014 வரை 13வது குஜராத் சட்டமன்றத்தில் வன மற்றும் சுற்றுச்சூழல், பழங்குடியினர் நலன், சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவையிலும் பணியாற்றினார். மீண்டும் நவம்பர் 2014இல் சட்டசபை பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 7 ஆகஸ்ட் 2016 வரை பணியாற்றினார்.[1][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Ganpat Vasava set to be elected as Gujarat Assembly Speaker". The Economic Times. 7 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  2. "Vasava elected Speaker unopposed". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  3. "Ganpat Vasava elected unopposed as Speaker of Gujarat Assembly". The Economic Times. 10 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  4. "Ramanlal Vora elected unopposed new Speaker of Gujarat Assembly". Business Standard News. 22 August 2016. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.