கண்படைநிலை
Appearance
கண்படைநிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். அரசரும் அரசரைப் போன்றவர்களும் சபையில் நீண்ட நேரம் இருக்கும்போது, மருத்துவர் மந்திரிமார் முதலியோர்க்கு கண் துயில் கொள்வதைக் கருதிக் கூறுவது கண்படை நிலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].
குறிப்புகள்
[தொகு]- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 116
உசாத்துணைகள்
[தொகு]- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்