கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
படிமம்:கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.jpg
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தொடரின் சுவரொட்டி
வகைகாதல்
நகைச்சுவை
மூலம்சி வாஸ் பிரிட்டி
எழுத்துசிவகுமார் பாலகிருஷ்ணன்
கல்பனா ராமலிங்கம்
முகமட் அமின்
இயக்கம்சிவகுமார் பாலகிருஷ்ணன்
நடிப்புஏபி சிமோன்
பாஷிணி சிவகுமார்
அலாவுதீன்
கொஸ்தாலியோ ஸ்பென்சர்
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்மொழி
சீசன்கள்1
எபிசோடுகள்32
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ஆரஞ்சு சாக்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம்
ஒளிபரப்பான காலம்12 நவம்பர் 2018 (2018-11-12) –
10 சனவரி 2019 (2019-01-10)
Chronology
தொடர்புடைய தொடர்கள்ஷி வாஸ் பிரிட்டி

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இது ஒரு சிங்கப்பூர் நாட்டு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த தமிழ்மொழி தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை 'சிவகுமார் பாலகிருஷ்ணன்' என்பவர் இயக்க, ஏபி சிமோன், பாஷிணி சிவகுமார், அலாவுதீன் மற்றும் கொஸ்தாலியோ ஸ்பென்சர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இது 2015ஆம் ஆண்டு ஒளிபரப்பான தென் கொரியா நாட்டு தொடரான சி வாஸ் பிரிட்டி என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் நவம்பர் 12, 2018ஆம் ஆண்டு முதல் சனவரி 10, 2019 வரை சிங்கப்பூர் நாட்டு நேரப்படி திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இரவு 10:30 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 32 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

இது ஒரு 4 நண்பர்களை பற்றிய ஒரு காதல் கதை. லாவண்யா மற்றும் சத்ய பிரகாஷ் இருவரும் சிறுவது நண்பர்கள். பல வருடம் கழித்து சிங்கப்பூர் வரும் சத்ய பிரகாஷ் தனது சிறுவயது தோழியை கணவருகின்றான். லாவண்யா தான் அழகு இல்லை தன்னை சத்ய பிரகாஷ் ஏற்க மாட்டான் என நினைத்து தனது தோழியான தாராவை லாவண்யவாகா நடிக்க வைக்கின்றாள். அதே சமயம் சத்ய பிரகாஷ் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலைக்கு போகும் லாவண்யா அங்கு அருண் கூட நட்பு வருகின்றது. இருவரும் நல்ல நண்பர்களானார்கள். அதே நேரம் லாவண்யா செய்யும் பிழைகள் மீது கோவப்படும் சத்ய பிரகாஷ் இதனால் இருவரும் எதிரிகளாக மறுக்கின்றார்கள். இவர்கள் செய்யும் ஆழ்மாற்றம் சத்ய பிரகாஷ்க்கு தெரிய வந்தால் லாவண்யா தாரா காதல் என்னாவுக்கும் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முக்கிய நடிகர்கள்[தொகு]

 • ஏபி சிமோன் - லாவண்யா
  • சத்ய பிரகாஷின் சிறுவயது தோழி, தாராவின் நண்பி.
 • பாஷிணி சிவகுமார் - தாரா/லாவண்யா
  • லாவண்யாவின் தோழி, பொய்யான லாவண்யா.
 • அலாவுதீன் - சத்ய பிரகாஷ்
  • லாவண்யாவின் சிறுவயது நண்பன், தாராவின் காதலன் மற்றும் லாவண்யாவின் முதலாளி.
 • கொஸ்தாலியோ ஸ்பென்சர் - அருண்
  • லாவண்யாவுடன் ஒன்றாக வேலை செய்பவன், லாவண்யா மீது இவனுக்கு ஒரு காதல்.

துணை நடிகர்கள்[தொகு]

 • விசாதி நாயுடு
 • ரேவந்தி ரவீந்திரன்
 • ஆனந்தன் குட்டி
 • நிகிதா சாரா நிதிஷ்குமார்
 • யாழினி வேணு
 • சமந்தா கலைவாணி
 • மோனிகா
 • லூவிஷா
 • அஹமத் துல் கான்
 • மோகன் வருமன்
 • விஷ்ணு காந்த
 • எம்மார் முஹம்மது அஸ்லம்
 • சேரன் ஷோபனா
 • நிர்மலா
 • நெடுமாறன்

நடிகர்களின் தேர்வு[தொகு]

இது ஒரு காதல் நகைச்சுவை பின்னையை கொண்ட தொடர். இந்த தொடரில் புதுமுக நடிகை ஏபி சிமோன் மற்றும் மலேசியா நாட்டு நடிகை பாஷிணி சிவகுமார் இருவரும் கதாநாயகிகளால் நடிக்கிறார்கள். பாஷிணி சிவகுமார் மலேசியா நாட்டு அழகி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதலா காதலா என்ற தொடரில் நடித்த அலாவுதீன் இந்த தொடரில் சத்ய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் இவருடன் சேர்ந்து புதுமுக நடிகர் கொஸ்தாலியோ ஸ்பென்சர் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் ஒரு உடல் பயிற்சி நிபுணராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வசந்தம் தொலைக்காட்சி  : திங்கள் - வியாழன் இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் அடுத்த நிகழ்ச்சி
சிநேகிதனே ரௌத்ரம்