கண்ணாடி வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப் ஜான்சன் கண்ணாடி வீடு
Philip Johnson Glass House
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
ஐ.அ. தேசிய வரலாற்று அடையாள மாவட்டம்
கண்ணாடி வீடு
அமைவிடம்: 798-856 பொன்னஸ் ரிட்ஜ் சாலை, நியூ கானான்
ஆள்கூறு: 41°8′32.73″N 73°31′45.84″W / 41.1424250°N 73.5294000°W / 41.1424250; -73.5294000ஆள்கூறுகள்: 41°8′32.73″N 73°31′45.84″W / 41.1424250°N 73.5294000°W / 41.1424250; -73.5294000
கட்டியது: 1949
கட்டிடக்
கலைஞர்:
பிலிப் ஜான்சன்
கட்டிடக்கலைப் 
பாணி(கள்):
நவீன இயக்கம்
நிர்வாக அமைப்பு: வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
18, பெப்ரவரி 1997[1]
வகை NHLD: 18, பெப்ரவரி 1997[2]
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
97000341

கண்ணாடி வீடு அல்லது ஜான்சன் வீடு (Glass House, or Johnson house ) என்பது அமெரிக்காவின் கனெக்டிகட், நியூ கானானில், பொன்னஸ் ரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு வரலாற்று இல்ல அருங்காட்சியகமாகும். இதை 1948 - 49இல் பிலிப் ஜான்சன் தனது சொந்த பயன்பாட்டுக்கான வீடாக வடிவமைத்தார். 1947இல் நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகத்தில் லுட்விக் மீஸ் வான் டெர் ரோவின் ஒரு கண்காட்சியில் கண்ணாடி மாளிகையின் ஒரு மாதிரி வடிவத்தை ஜான்சன் பார்த்தார்.[3] இதனால் நவீன கட்டிடக்லை மீது ஜான்சனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து ஜான்சன் மலைகள் சூழ்ந்த நியூ கானான் பகுதியில் தனக்குச் சொந்தமான 49 ஏக்கரில் இந்தக் கண்ணாடி வீட்டை வடிவமைத்தார். இது இவரது காலத்துக்கப் பிறகு 1997ஆம் ஆண்டில் தேசிய வரலாற்று அடையாளமாக அறிவிக்கப்பட்டது. இது இப்போது வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளைக்கு சொந்தமானதாக உள்ளது. இந்த அமைப்பானது பொதுமக்கள் பார்வைக்குக் கண்ணாடி வீட்டைத் திறந்துள்ளது.

இந்த வீடானது கண்ணாடி, எஃக்கு போற்றவற்றால் இணைத்து உருவாக்கப்பட்டது ஆகும். இதுபோன்ற கட்டிடங்களைக் கட்ட போதிய உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டடமானது இன்றைய கண்ணாடிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக உள்ளது. 58 வயதில் ஓய்வுபெற்ற ஜான்சன், 1960[4] ஆம் ஆண்டு முதல் அவரது நீண்ட கால தோழரான டேவிட் விடனியுடன் அவர் முதன் முதலில் கட்டிய இந்த கண்ணாடி வீட்டில் தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார். மேலும் இங்கு ஏராளமான கலைப்படைப்புகளையும் சேகரித்தது வைத்திருந்தார்.[5][6][7] இந்த கண்ணாடி வீட்டைச் சுற்றி விருந்தினர் இல்லம், கலைக்கூடம், சிற்பக்கூடம், பிலிப் ஜான்சனின் அலுவலகம், செங்கலால் கட்டப்பட்ட மற்றொரு வீடு என பிலிப் ஜான்சன் தன்னுடைய எண்ண ஒட்டங்களுக்கு ஏற்ப அப்பகுதியில் மொத்தம் 14 கட்டிடங்களை அவர் வடிவமைத்தார்.[8]

வீடு[தொகு]

கண்ணாடி வீடு

இந்தக் கண்டாடி வீடானது தெருவின் பார்வையில் இருந்து விலகி உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடி வீட்டைச் சுற்றியுள்ள ஓக் மரங்கள், புல்வெளி, மேடு பள்ளமாக உள்ள மலைச்சரிவு ஆகியவை வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு இயற்கையோடு ஒன்றிணைந்திருப்பது போன்ற காட்சியைத் தருகிறது.[6] செவ்வக வடிவில் கண்ணாடிநில் சூழப்பட்ட இக்கட்டிடமானது 56 அடிகள் (17 m) நீளத்துடனும், 32 அடிகள் (9.8 m) அகலத்துடனும், 10½ feet (3.2 m) உயரத்துடனும் உள்ளது. படுக்கை அறை, சமையலறை, நூலகம், முதன்மை அறை என ஒரு வீட்டில் இருக்கவேண்டிய எல்லா அம்சங்களும் இந்தக் கண்ணாடியால் அமைக்கப்பட்ட வீட்டில் உள்ளன. வீட்டின் ஒரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய தூண்தான் இந்த வீட்டுக்குப் பக்கபலமாக உள்ளது. இந்தத் தூணின் ஒருபுறம் கழிவறையும் மற்றொருபுறம் கணப்பு அடுப்பும் உள்ளது. இதனுடன் செங்கலால் கட்டப்பட்ட மற்றொரு வீட்டையும் இவர் வசிக்கப்பயன்படுத்தினார் (பின்னர் கண்ணாடி வீடானது பொழுதுபோக்கு பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது).[9]

கண்ணாடி வீட்டின் தரையில் பதிக்கப்பட்டுள்ள சிகப்பு செங்கற்கள் மீன்முள் வடிவ குறுக்கு முறையில் பதிக்கப்பட்டுள்ளது.[10]

விருந்தினர் இல்லமாக பயன்படுத்தப்பட்ட செங்கல் வீடு
  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2007-01-23.
  2. "Philip Johnson Glass House". National Historic Landmark summary listing. National Park Service. 2007-10-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-10-03 அன்று பார்க்கப்பட்டது.
  3. Friedman, Alice T., Women and the Making of the Modern House, p 130, New Haven, Connecticut: Yale University Press (2006), ISBN 978-0-300-11789-9, retrieved via Google Books on August 8, 2010
  4. Mason, Christopher, "Behind the Glass Wall", June 7, 2007, New York Times, retrieved August 8, 2010
  5. The Glass House, David Whitney, Portrait of a Curator as a Young Man பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம்
  6. 6.0 6.1 Pierce, Lisa, "Through the Looking Glass", August 1, 2010, pp 1, A4, The Advocate of Stamford, Connecticut
  7. Gutoff, Bija, "Philip Johnson: A Glass House Opens", at Apple website, no date given, retrieved August 8, 2010 பரணிடப்பட்டது 8 பெப்ரவரி 2010 at the வந்தவழி இயந்திரம்
  8. ரேணுகா (20 அக்டோபர் 2018). "ஒரு கல்... ஒரு கண்ணாடி". கட்டுரை. இந்து தமிழ். 25 திசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  9. No byline, "Glass House: It consists of just one big room completely surrounded by scenery", pp 94–96, September 26, 1949, LIFE magazine, retrieved via Google Books, August 8, 2010
  10. Alfirevic Djordje, Simonovic-Alfirevic Sanja. Interpretations of Space Within Space Concept in Contemporary Open-Plan Architecture / Primena koncepta prostor u prostoru u savremenoj arhitekturi otvorenog plana. Arhitektura i urbanizam (Belgrade), No.42 (2016), pp. 24–40.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடி_வீடு&oldid=3586464" இருந்து மீள்விக்கப்பட்டது