உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணாடி மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாடி மரத்தின் இளம்செடி


கண்ணாடி மரம் (Looking Glass Tree ) அல்லது சுந்தரி மரம் என்பது இசுட்டெர்குலியா பேரினத்தின் மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

மரத்தின் அமைப்பு

[தொகு]

சிறிய அழகான பசுமையான மரம். இதன் இலைகள் ஒரு அடி நீளம் வரை இருக்கும். பார்ப்பதற்கு பளபளப்பான மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இதன் அடிப்பகுதி ஒளிப்புகாதவாறு வெள்ளி நிறத்தில் உள்ளது. இதனால் சூரிய ஒளிப்பட்டு இதன் இலைகள் கண்ணாடி போல் எதிரொளிரும். பார்ப்பதற்கு பல கண்ணாடிகள் தொங்கவிட்டதுபோல் இருக்கும். இவ்விலையில் முகம் கூடத் தெரியும். இம்மரத்தில் சிறிய பச்சை நிறப்பூக்கள் தோன்றும்.

காணப்படும் பகுதிகள்

[தொகு]

இதில் நான்கு இனங்கள் உண்டு. இந்தியா, பாகித்தான், ஆசிய நாடுகளின் சதுப்ப நிலப்பகுதியில் இவை வளர்கின்றன. பெரும்பாலும் அடர்ந்த காடுகளில் உள்ளது.

சிறப்புகள்

[தொகு]

சுந்தரி (கண்ணாடியிலை) மரமே சிறப்பான மரமாகையால் இதற்கு இப்பெயர் வந்தது, இவ்விலைகளிலிருந்ததெதிரொளிரும் ஒளியை பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாகப் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கோள்

[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடி_மரம்&oldid=3932692" இலிருந்து மீள்விக்கப்பட்டது