கண்ணாடியிழை
கண்ணாடியிழை (fibreglass) என்பது கண்ணாடியின் சிறு இழைகளால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது பல பன்னுரு தயாரிப்புகளுக்கு வலுவூட்டும் பொருளாக பயன்படுகிறது; இதனால் வலுவூட்டப் பட்ட கலப்புரு பொருட்களை கண்ணாடியிழை வலுவூட்டு நெகிழி என்று (பிரபலமாக கண்ணாடியிழை என்று) கூறப்படுகிறது. கண்ணாடி தயாரிப்பாளர்கள் காலகாலமாக கண்ணாடியிழைகளை தயாரித்துவந்தாலும், நுண்ணிய இயந்திரங்கள் வந்த பின்னரே பெரிய அளவில் கண்ணாடியிழை தயாரிப்புகள் தயாரிக்கும் நிலை சாத்திய மாயிற்று. 1893 இல், எட்வர்ட் ட்ரும்மொந்து லிப்பி என்பவர் உலகத்தின் கொலம்பியர் எக்ஸ்பொசிசன் என்ற நிறுவனத்தில் பட்டிழைகளுடன் கண்ணாடியிழைகளை சேர்த்து ஒரு ஆடை தயாரித்தார். இந்த ஆடையை முதலில் உடுத்தியவர் பிரபல மேடை நடிகை சியார்சியா கெவான்.
இப்பொழுது பொதுவாக கண்ணாடியிழை என்று அழைக்கப்படும் பொருளை உண்மையில் 1938 ஆம் ஆண்டு ஓவென்சு கார்னிங்கில் உள்ள ரசல் கேம்சு சிலைடர் என்பவர் ஒரு காப்பு பொருளாக பயன்படுத்தினார். இது ஆங்கிலத்தில் பைபர்கிளாசு என்ற வணிகப் பெயரில் வர்த்தகத்தில் இருந்தது; இது பின்னர் வணிகக்குறியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சற்று இதே போலவே, ஆனால் மிக விலை உயர்ந்த தொழினுட்பம் அது மிக வலிமையாகவும், எடை குறைவாகவும் உள்ள பயன்பாடுகளுக்கு தேவைப்படும் நிலையில் கார்பன் இழை பயன்படும்.
இழை உருவாக்கம்
[தொகு]கண்ணாடியிழையானது சிறு கண்ணாடி நார்களை பல நுண்ணிய நாரிழைகளைக் கொண்டு நெய்யும் பொழுது உருவாகிறது. கண்ணாடியைக் காய்ச்சி சிறு நார்களாக ஆக்கும் தொழில்நுட்பத்தை மிலினியா என்று அழைத்தனர்; எனினும் ஆடை தயாரிப்பில் தற்போதுதான் கண்ணாடியிழை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு வரை, எல்லா கண்ணாடியிழைகளும் சிறு அளவுடைய நார்களாக உருவாக்கப்பட்டது. முதன்முதலில் வியாபார ரீதியாக கண்ணாடியிழை தயாரிப்பு 1936 ல் தொடங்கப்பட்டது. 1938 ல் ஓவென்ஸ்-இல்லினோயிஸ் கிளாஸ் கம்பெனி மற்றும் கார்னிங் கிளாஸ் வொர்க்ஸ் இணைந்து ஓவென்ஸ்-கார்னிங் பைபர் கிளாஸ் கார்ப்பொரேசன் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினர். இந்த புதிய நிறுவனம் தொடர் நுண்ணிழை கண்ணாடியிழை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. இன்றும் ஓவன்ஸ்-கார்னிங் கண்ணாடியிழை தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது [1]
கண்ணாடியிழை வகைகளில் பெரும்பாலும் பயன்பத்துவது E-glass (alumino-borosilicate glass with less than 1 wt% alkali oxides, குறிப்பாக இழை வலுவூட்டு நெகிழிகளில் பயன்படும்), but als A-glass (alkali-lime glass with little or no boron oxide), E-CR-glass (alumino-lime silicate with less than 1 wt% alkali oxides, அதிக அமில எதிர்ப்பு தன்மை கொண்டவை ), C-glass (alkali-lime glass with high boron oxide content, used,e.g., for glass staple fibers), D-glass (borosilicate glass with high dielectric constant), R-glass (alumino silicate glass without MgO and CaO அதிக இயந்திர தேவைகளுக்கு பயன்படுபவை), and S-glass (alumino silicate glass CaO இல்லாமல் ஆனால் MgO சேர்த்தும் அதீத வலிமை உள்ளவை ).[2]
வேதியியல்
[தொகு]கண்ணாடியிழைகளின் அடிப்படை என்னவென்றால் அது சிலிக்கா SiO2.இது தூய நிலையில் பன்னுருவாக இருக்கும் , (SiO2)n.இதற்கு உருகுதன்மைகள் கிடையாது ஆனால் மக்கும் நிலையில் இது மென்மையாக மாறும் .பெரும்பாலான மூலக்கூறுகள் தாராளமாகவே நகர்கின்றன .பின் கண்ணாடியை வேகமாக குளிரூட்டினால் , அவை சீரான அணுஅமைப்பை உருவாக்குவது இல்லை .[3]
தன்மைகள்
[தொகு]கண்ணாடியிழைகள் அதன் மேற்பரப்பிற்கும் எடைக்கும் உள்ள விகிதம் மிக அதிகமாக உள்ளதினால் பயன்படுத்தபடுகிறது .எப்படியானாலும் , இதன் மேற்பரப்பு அதிகரிப்பதினால் இது வேதியியல் தாக்கத்திற்கு உள்ளாகிறது .இது காற்றை அதற்குள் செல்வதை தடுப்பதினால் , கண்ணாடியிழை பொருட்களை 0.05 W/(m.K) வெப்ப கடத்துதிறன் கொண்ட நல்ல வெப்ப காப்பு பொருளாக இருக்கிறது.[4]
கண்ணாடி வலுவூட்டு நெகிழி
[தொகு]கண்ணாடி வலுவூட்டு நெகிழி (க.வ.நெ) என்பது சிறு கன்னடியிழைகளால் வலுவூட்டப்பட்ட நெகிழிகளை உருவாக்குவதற்கான ஒரு கலப்புப் பொருள் ஆகும் .கிராபைட் வலுவூட்டு நெகிழிகளை போலவே , இந்த கலப்புப் பொருளும் அதன் பெயரை கொண்டே வலுவூட்டு இழைகள் (கண்ணாடியிழைகள்) என்று குறிப்பிடுவார்கள்.[2][5]
பயன்கள்
[தொகு]வழக்கமான கண்ணாடியிழைகளின் பயன்பாடுகள்: பாய்கள், வெப்ப காப்பு பொருள், மின்காப்பு பொருள், பல்வகை பொருள்களுக்கு வலுவூட்டுதல்; கூடாரக் கம்புகள், ஒலி உறுஞ்சி, வெப்ப எதிர்ப்பு புனைவுகள் , வலிமையான புனைவுகள், கம்புகள், வில் வகைகள், கூரைத்தகடுகள், தானுன்ந்து சட்டம் போன்றவற்றின் உட்பொருளாக இருத்தல். கண்ணாடியிழை தொட்டிகளையும் பாத்திரங்களையும் உருவாக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.[2][5]
கூடுதல் பார்வைக்கு
[தொகு]குறிப்புகள் மற்றும் ஒப்பீடுகள்
[தொகு]- ↑ "A Market Assessment and Impact Analysis of the Owens Corning Acquisition of Saint-Gobain's Reinforcement and Composites Business". August 2007. Archived from the original on 2009-08-15. பார்க்கப்பட்ட நாள் 2009-07-16.
- ↑ 2.0 2.1 2.2
E. Fitzer; et al., "Fibers, 5. Synthetic Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim, Germany: Wiley-VCH Verlag GmbH & Co. KGaA
{{citation}}
: Explicit use of et al. in:|last=
(help) - ↑ Gupta, V.B. (1997). Manufactured Fibre Technology. London: Chapman and Hall. pp. 544–546. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-54030-4.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Frank P. Incropera (1990). Fundamentals of Heat and Mass Transfer (3rd ed.). John Wiley & Sons. pp. A11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-51729-1.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ 5.0 5.1
B. Ilschner; et al., "Composite Materials", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim, Germany: Wiley-VCH Verlag GmbH & Co. KGaA
{{citation}}
: Explicit use of et al. in:|last=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Fiberglass wiki பரணிடப்பட்டது 2021-02-25 at the வந்தவழி இயந்திரம்
- Fibreglass Flat Roof
- Fiberglass and health பரணிடப்பட்டது 2008-10-13 at the வந்தவழி இயந்திரம்
- Fiberglass Wall Reinforcement Mesh பரணிடப்பட்டது 2009-08-18 at the வந்தவழி இயந்திரம்
- International Geosynthetics Society, information on geotextiles and geosynthetics in general.
- Glassfiber Mat for Roofing System பரணிடப்பட்டது 2009-08-16 at the வந்தவழி இயந்திரம்