உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணாடிக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோமன் காலத்தில் படைத்துறைப் பாணி கண்ணாடி கோப்பை (தற்போது Ljubljana) கல்லறை.

கண்ணாடி கலை (glass art) குறிப்பது முற்றிலும் கண்ணாடியில் செய்யப்பட்ட தனிப்பட்ட கலை படைப்புகள் ஆகும். நினைவுச்சின்னங்கள், சுவர் அறையில் தொங்கவிடப்படும் திரைச்சீலைகள், சாளரங்கள், கலைக்கூடங்கள், தொழிற்சாலைகளில் செய்யப்பட்ட கலை படைப்புகள் உட்பட, கண்ணாடி நகையும் மேசைக்கலனும் எனக் கண்ணாடி அளவுகளைப் பொறுத்து கலைப்படைப்புகள் உருவாகின்றன.

20 ஆம் நூற்றாண்டின் கலைக்கூடக் கண்ணாடி எடுத்துகாட்டுகள்:

கண்ணாடிச் சிலைகள்[தொகு]

திமோ சர்ப்பனேவா சிலை. சர்ப்பனேவா, இலிட்டாலா கண்ணாடிப் பணிகள் 20 ஆம் நூற்றாண்டின் கண்ணாடிக் கலைசார் புதிய நுபங்களுக்கான தேடல் அமைந்தது.

மிகச் சிறந்த கண்ணாடிச் சிலைகள் இலிவியோ செகுசோ, காரன் இலமான்ட்டே, சுட்டானிசுலாவ் இலிபென்சுகி, யாரோசுலாவா பிறைச்சுதோவா ஆகிய கலைஞர்களின் நினைவுகூரத்தக்க அரும்படைப்புகளாகும். மற்றொரு அரிய படைப்பு இரெனே இரவுபிசெக்கின் "பொருள்" 1960 ஆகும். இது 52.2 செமீ நீள ஊதுமுறை செஞ்சூட்டுக் கலைப்பணியாகும்.[1] இவை கார்னிங்கு கன்ணாடி அருங்காட்சியகத்தில் "விளம்பர ஊழி வடிவமைப்பு" கண்காட்சியில் 2005 இல் காட்சிக்கு வைக்கப்பட்டன.[2]

21 ஆம் நூற்றாண்டு கண்ணாடிச் சிலை எடுத்துகாட்டுகள்:

அருங்காட்சியகங்கள்[தொகு]

ஆத்திரேலியா, கான்பெரா கண்ணாடித் தொழிகத்தில் ஒரு காட்சிப் பெட்டகம்

பொது அருங்காட்சியகங்களில் பழைய வரலாற்று கண்ணாடிக் கலைப்பொருட்கள் காணப்படுகின்றன. புதிய நிகழ்காலக் கன்ணாடிக் கலைப்பொருட்கள் தனித்தப் பொறுப்புள்ள அருங்காட்சியகங்களிலும் நிகழ்கால கலைசார் அருங்காட்சியகங்களிலும் உள்ளன. இவற்றில் வர்ஜீனியா நார்த்போக்கில் அமைந்த கிரைசுலர் அருங்காட்சியகம், தக்கோமா கண்ணாடி அருங்காட்சியகம். நியூயார்க் நகரில் உள்ளபெருநகரக் கலை அருங்காட்சியகம், தொலெதோ கலை அருங்காட்சியகம், கார்னிங்கு கண்ணாடி அருங்காட்சியகம், ஆகியன அடங்கும்.இந்த நியூயார்க் அருங்காட்சியகங்களில் கண்ணாடிக் கலை வரலாறு சார்ந்த 45,000 பொருட்களுக்கும் கூடுதலான திரட்டி வைக்கப்பட்டுள்ளன.[3] போசுட்டனில் உள்ள சுண்ணப் பச்சை ஐசிகிள் கோபுரத்து நுண்கலை அருங்காட்சியகத்தில் தேல் சுகுலி உருவாக்கிய ஒரு 42.5 அடி உய்ரக் கண்ணாடிச் சிலை உள்ளது.[4]2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில் முதன்முதலாக சிக்காகோ நகர நேவியர் பூங்காவில் திறந்து வைக்கப்பட்ட பன்னிறக் கண்ணாடிச் சாளர அருங்காட்சியகம் வண்ணக் கண்ணாடிச் சாளரங்களுக்கு மட்டுமானதாகும். இதில் உலூயிசு கம்போர்ட்டு திஃபனி, ஜான் இலஃபார்கே அகிய இருவரின் அரிய படைப்புகள் உள்ளன. இது அன்றாடம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படுகிறது. [5] ஐக்கிய அரசின் தேசியக் கண்ணாடி மையம் தைன் அண்டு வேர் மாநிலத்தின் சுந்தர்லாந்து நகரில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "René Roubícek". The Corning Museum of Glass. The Corning Museum of Glass. Archived from the original on 11 June 2011. பார்க்கப்பட்ட நாள் 13 June 2014.
  2. "Czech Glass: Design in an Age of Adversity 1945-1980". The Corning Museum of Glass. The Corning Museum of Glass. பார்க்கப்பட்ட நாள் 13 June 2014.
  3. "Corning Museum of Glass". Archived from the original on 2008-01-12. பார்க்கப்பட்ட நாள் 2007-10-14.
  4. "Lime Green Icicle Tower". Museum of Fine Arts. பார்க்கப்பட்ட நாள் October 26, 2014.
  5. Smith Museum of Stained Glass Windows பரணிடப்பட்டது 2013-01-04 at Archive.today
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடிக்_கலை&oldid=3731031" இலிருந்து மீள்விக்கப்பட்டது