கண்ணம்மா என் காதலி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கண்ணம்மா என் காதலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கண்ணம்மா என் காதலி
கண்ணம்மா என் காதலி- திரைப்படக் காட்சி
இயக்கம்கொத்தமங்கலம் சுப்பு
தயாரிப்புகே. ராம்நாத்
கதைகொத்தமங்கலம் சுப்பு
இசைஎம். டி. பார்த்தசாரதி
நடிப்புஎம். கே. ராதா
எல். நாராயண ராவ்
சுப்பைய்யா பிள்ளை
குலத்து மணி
எம். எஸ். சுந்தரி பாய்
அங்கமுத்து
பி. ஏ. சுப்பையா பிள்ளை
வெளியீடுசூலை 20, 1945
ஓட்டம்.
நீளம்10914 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணம்மா என் காதலி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். படத்தின் உரையாடல், பாடல் இயக்கம் கொத்தமங்கலம் சுப்பு, இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எல். நாராயண ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] உலகப் போரில் ரங்கூனுக்கு ஆதரவாக பிரித்தானியர்கள் அரசின் ஆலோசனையின் பேரில் இப்படம் தயாரிக்கப்பட்டது.[2] இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதியிருந்தார்.

கதைச் சுருக்கம்[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ரங்கூன் நகருக்கு அருகில் ஆண்டுதோறும் தீப உற்சவம் என்று ஒரு களியாட்டம் நடைபெறுவதுண்டு. அந்த உற்சவத்திற்கு மருத்துவர் சுந்தரேசன் என்பவர் தனது ஐந்து வயதுக் குழந்தை கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். கூட்ட நெருசலில் குழந்தையைத் திருடன் தூக்கிச் சென்று நகைகளை எடுத்துக்கொண்டு குழந்தையை விட்டு விட்டுப் போய்விடுகிறான். குழந்தையை எவ்வளவோ தேடியும் குழந்தை அகப்படவில்லை. பத்தாண்டுகள் உருண்டோடிவிடுகிறது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் சப்பானியர் ரங்கூனைத் தாக்குகின்றனர்.[2]

இந்தியாவை நோக்கி அநேகர் போய்க்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு சுந்தரி தொடருந்து நிலையத்திற்கு வந்து முத்து ஏறினானோவென்று தேடுகிறபோது கூட்டம் அவளை தொடருந்தை விட்டு இறங்க விடாமல் நெருக்குகிறது. சுந்தரியால் இறங்க முடியவில்லை, தொடருந்து புறப்பட்டு விடுகிறது. தொடருந்தை சப்பானியர் குண்டு எறிந்து தாக்கவே பயணிகள் பலர் காயமடைகின்றனர். சுந்தரிக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது. காயத்துக்கு மருந்திடும் போது சுந்தரியின் மச்சத்தைக் கண்டு காணாமல்போன தனது குழந்தை கண்ணம்மா என ஆனந்தமடைகிறார் மரு. சுந்தரேசன்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (9 மே 2008). "Kannamma En Kaathali 1945". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081103150043/http://www.hindu.com/cp/2008/05/09/stories/2008050950381600.htm. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2016. 
  2. 2.0 2.1 2.2 சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988