கண்ணன் (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் 2010 இல் தமிழ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். [1]

தொழில்[தொகு]

இசைக் கல்லூரியில் பயின்ற கண்ணன் 1988 இல் கிதார் இசைக் கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு தசாப்த காலம் சி. எஸ். அமுதனின் முகமை மூலம் சுமார் 600 விளம்பரங்களுக்கு இசை அமைத்தார். கண்ணனுக்கு அதே நிறுவனமானது தமிழ் படம் (2010) படத்தில் வாய்ப்பளித்தது. [2] [3] இந்த படத்தின் பாடல்கள் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [4] "பச்ச மஞ்ச" மற்றும் "ஓ மக ஜீயா" பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. முந்தைய பணிகளை விட இந்த படத்திற்கு கண்ணன் செய்த இசையமைப்புப் பணிகளுக்காக அதிக அங்கீகாரம் பெற்றார்.[சான்று தேவை]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் குறிப்புகள்
2010 தமிழ் படம்
2011 சாப்ளின் சமந்தி
2012 மயங்கினேன் தயங்கினேன்
2012 மெய்
2012 யாருக்கு தெரியும் தமிழ் பதிப்பின் உரையாடல் எழுத்தாளராகவும்,
ஒரே நேரத்தில் கன்னடத்தில் சேலஞ்ச் மலையாளத்தில் 120 மினிட்ஸ் என்று மும்மொழிகளில் படமாக்கப்பட்டது
2013 அழகன் அழகி
2013 ரெண்டாவது படம்
2013 கருப்பம்பட்டி
2014 போங்கடி நீங்களும் உங்க காதலும்
2014 கல்கண்டு
2015 பொங்கி எழு மனோகரா
2015 திலகர்
2018 தமிழ் படம் 2
2019 குத்தூசி

குறிப்புகள்[தொகு]