கண்ணனூர் (துறையூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணனூர்
ஊராட்சி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,233
மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு621 206

கண்ணனூர் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராட்சி ஆகும்.[1] இவ்வூராட்சியானது வடக்குவெளி, சமத்துவபுரம், கொத்தம்பட்டி, பெத்துப்பட்டி, சின்னசேலம்பட்டி, மருக்கலான்பட்டி, நல்லியம்பட்டி என்ற கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இவ்வூராட்சியில் கண்ணனூர், வடக்குவெளி என்ற இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளன.

மக்கட் தொகை[தொகு]

இந்திய அரசின் 2011 கணக்கெடுப்பின்படி 6233 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஆண்கள் 3108 பேர் பெண்கள் 3125 நபர்கள் ஆவர்.

அமைவிடம்[தொகு]

கொல்லிமலையில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் அய்யாற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. திருச்சி மாவட்ட எல்லைப்பரப்பின் வடக்கு பகுதியில் திருச்சியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் மாநில நெடுஞ்சாலை எண் 161 இல் உள்ளது.

வரலாறு[தொகு]

வள்ளுவப்பாடி நாடு என்பது கண்ணனூர் என்னும் ஊரை மையமாகக் கொண்ட நாட்டுப்பகுதி எனத் தெரியவருகிறது. இப்பகுதியில் இக்காலத்திலும் வள்ளுவன் குடியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர். இந்த வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு எனச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவதாக மு. அருணாசலம் தெரிவிக்கிறார்.

பொருளாதாரம்[தொகு]

வேளாண்மைத் தொழில் முதன்மையாக திகழ்கிறது. இது அய்யாற்றின் நீர் வளத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நெசவுத்தொழில், மண்பாண்டத்தொழில், புட்டுத்தொழில் (பிட்டு) முதலான தொழில்களும் செய்து வருகின்றனர் .

கல்வி நிறுவனங்கள்[தொகு]

1. இமயம் கல்வி நிறுவனம்

கல்லூரிகள்[தொகு]

இமயம் கல்வி நிறுவனங்களின் சார்பில் கலை அறிவியல் கல்லூரி ,பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி , பல்தொழில் நுட்பக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

பள்ளிகள்[தொகு]

  1. அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி
  2. அரசு உயர்நிலைப் பள்ளி
  3. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
  4. அரசு ஆதிதிராவிட நலத் தொடக்கப்பள்ளி
  5. கலையரசி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி
  6. ஆதவன் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி

நூல் நிலையம்[தொகு]

1.கிராமப்புற நூலகம்

வங்கிகள்[தொகு]

1.கரூர் வைஸ்யா வங்கி

2.இந்தியன் ஓவர்ஸ்சீஸ் வங்கி

3.அஞ்சல் நிலையம்

4.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம்

மருத்துவமனை[தொகு]

1.அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2.அரசு கால்நடை மருத்துவமனை

கோவில்கள்[தொகு]

Kannanur

1.செல்லாண்டியம்மன் கோவில்

2.அங்காளம்மன் கோவில்

3.மஹாலக்ஷ்மி அம்மன் கோவில்

4.பகவதி அம்மன் கோவில்

5.ஆகாச கருப்புசாமி கோவில்

6.முருகன் கோவில்

7.பாப்பாத்தி அம்மன் கோவில்

வாரச்சந்தை[தொகு]

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தை கூடுகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமமக்கள் இச்சந்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். 

அடிக்குறிப்பு[தொகு]

1.Jump up ↑ இராசராச சோழ தேவன் (985-1014) காலத்துக் கல்வெட்டு, கண்ணனூர் சுந்தர ராசப் பெருமாள் கோயில் கல்வெட்டு.

2.Jump up ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 13-ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 23


மேற்கோள்கள்[தொகு]

  1. "கண்ணனூர் வரலாறு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணனூர்_(துறையூர்)&oldid=3114835" இருந்து மீள்விக்கப்பட்டது