உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டோலிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டோலிம்
கடற்கரை
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்வடக்கு கோவா மாவட்டம்
ஏற்றம்
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்8,599
மொழிகள்
 • அதிகாரபூர்வகொங்கணி
நேர வலயம்இ.சீ.நே.
பின்கோடு
403515
தொலைபேசிக் குறியீடு0832248

கண்டோலிம் (ஆங்கிலம்: Candolim) , கோவாவில் உள்ள கடற்கரை கிராமம் ஆகும். இது வடக்கு கோவாவில் உள்ளது. இது கலங்குட் கடற்கரையை அடுத்து அமைந்துள்ளது.

கண்டோலிம் கடற்கரை

[தொகு]

கண்டோலிம் கடற்கரைக்கு உள்நாட்டுப் பயணிகளும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். இந்தக் கடற்கரையில் வரிசையாக அமைக்கப்பட்ட குடில்கள் உள்ளன. அகுடா கோட்டை கண்டோலிம் கடற்கரைக்கு அருகே அமைந்துள்ளது. இது குளிப்பதற்கு உகந்த கடற்கரை ஆகும். இங்கு பாறைகள் மிக அரிதாக உள்ளன. இங்கு மிதமான, குளிப்பதற்கு ஏற்ற அலைகள் உள்ளன. கண்டோலிம் கடற்கரை ஓரங்களில் தென்னை மரங்கள் உள்ளன

இந்த ஓய்வு எடுக்கும் படுக்கைகளை உபயோகிப்பதற்கு (படங்களை காண்க) சில நேரங்களில் 2 மணி நேரத்திற்கு 150 முதல் 200 ரூபாய் வரையில் கட்டணம் செலுத்த வேண்டும். இங்குள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்து, இந்தக் குடில்களிலுள்ள ஓய்வு எடுக்கும் படுக்கைகளை உபயோகிப்பதற்கு தனியாகக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஓய்வு எடுக்கும் படுக்கைகள் குடைகளின் கீழ் உள்ளதால், வெயிலின் தாக்கமும் இல்லை.

கண்டோலிம் கடற்கரைக்கு அருகில் அதிக உணவகங்கள் உள்ளன. இங்குள்ள அனைத்து உணவகங்களிலும் மதுபானங்கள் கிடைக்கின்றன. இங்கு உள்ள குடில்களில் உடற்பிடிப்பு வசதியும் உண்டு. இங்கு வெளிநாட்டினர் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக உருசியாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிகின்றனர்.[1] உருசியாவை அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிகின்றனர்.[2]

கண்டோலிம் கடற்கரையில் பாறைகள் மிக அரிதாக உள்ளதால், இது குளிப்பதற்கு உகந்த கடற்கரையாக உள்ளது. மேலும் கடற்கரையில் சில அடி தூரம் வரை ஆளம் குறைவாக உள்ளதாலும், அலைகள் மிதமாக உள்ளதாலும், இது குளிப்பதற்கு உகந்த கடற்கரையாக உள்ளது.

கலங்குட்-கண்டோலிம் சாலையில் கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன.

அகுவாடா கோட்டை

[தொகு]
அகுவாடா கோட்டை-கண்டோலிம் கடற்கரை,கோவா

அகுவாடா கோட்டை 1612ல் போர்த்துக்கேயர்களால், டச்சு மற்றும் மராட்டியப் படையெடுப்பாளர்களை எதிர்கொள்ள கட்டப்பட்டது. கோட்டை உள்ள தேவாலயம், கலங்கரை விளக்கம், சமீப சிறையின் இல்லங்களை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக மாறிவிட்டன.

படங்களின் தொகுப்பு

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Candolim
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டோலிம்&oldid=4062590" இலிருந்து மீள்விக்கப்பட்டது