கண்டோபா கோயில் (ஜெசூரி)
| கண்டோபா கோயில் | |
|---|---|
ஜெசூரி கண்டோபா கோயில் | |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | மகாராட்டிரம் |
| மாவட்டம்: | புனே மாவட்டம் |
| அமைவு: | ஜெசூரி, புரந்தர் தாலுகா, புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
| ஏற்றம்: | 798 m (2,618 அடி) |
| ஆள்கூறுகள்: | 18°16′20″N 74°09′37″E / 18.27222°N 74.16028°E |
| கோயில் தகவல்கள் | |
| இணையதளம்: | [1] |


ஜெசூரி கண்டோபா கோயில் (Khandoba Temple of Jejuri), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலம், புனே மாவட்டம், புரந்தர் தாலுகாவில் உள்ள ஜெசூரி நகராட்சியின் குன்றில் கண்டோபர் எனும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.[1][2]இக்கோயில் புனே நகரத்திற்கு தென்கிழக்கே46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[3]
ஜெசூரி கண்டோபா கோயில் குன்பி மற்றும் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி தங்கர் மக்களின் குலதெய்வக் கோயில் ஆகும்.[4]
இந்து தொன்மவியல் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின்படி, சிவபெருமானின் ஒரு மனித அவதாரமே கண்டோபர் ஆவார். அரக்க சகோதரர்களான மணி மற்றும் மல்லா ஆகியோர் மக்களைத் துன்புறுத்தியதால் அவர்களை கண்டோபர் கொன்றார்.[5][2] [6]
வரலாறு
[தொகு]12 முதல் 13ம் நூற்றாண்டில் கண்டோபர் வழிபாடு துவங்கியது. இக்கோயிலை 17ம் நூற்றாண்டில் மகாராணி அகில்யாபாய் ஓல்கர் நிறுவினார். பேஷ்வாக்களின் காலத்தில் இக்கோயில் சீரமைக்கப்பட்டது.பேஷ்வா பாஜி ராவின் சகோதரர் சீமாஜி அப்பா இக்கோயிலுக்கு ஆலய மணியை கொடையாக வழங்கினார்.[7]
மூலவர்
[தொகு]இக்கோயில் மூலவர் பெயர் கண்டோபா அல்லது கந்தாராவ் அல்லது மல்ஹரி-மார்த்தாண்டன் ஆகும்.[8][9][10]கண்டோபர் சிவபெருமானின் அவதாரம் ஆவார்.[4]பல மகாராட்டிராவின் பல்வேறு குல மக்கள் கண்டோபரை குல தெய்வமாக வழிபடுகின்றனர்.[11]குன்பி மற்றும் தங்கர் கால்நடை மேய்க்கும் நாடோடி மக்கள் கண்டோபரை குலதெய்வமாக வழிபடுகின்றனர்.[12]
தொன்ம வரலாறு
[தொகு]புராணத்தின் படி, மணி மற்றும் மல்லா என்ற இரண்டு அரக்கச் சகோதரர்கள், தங்கள் தவங்களால் பிரம்மாவை மகிழ்வித்து பெற்ற வரத்தால் மிகவும் சக்திவாய்ந்தவர்களாகி, பூமியில் மக்களை துன்புறுத்தத் தொடங்கினர். இதனால் சிவபெருமான் கண்டோபர் அவதாரம் எடுத்து மணி மற்றும் மல்லாவை ஒரு கடுமையான போரில் ஒரு அரக்கனைக் கொன்றார். மற்றொர் அரக்கன் மன்னிப்பு கோரியதால், அவனை பொதுமக்களுக்கு சேவை செய்ய சிவபெருமான் பணித்தார்.[13][9]

கட்டிடக் கலை
[தொகு]718 m (2,356 அடி) உயரத்தில் ஹேமத்பந்தி கட்டிடக்கலை பாணியில் நான்கு வாயில்களுடன், 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயில் கருங்கல் & சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.[14]இக்குன்றுக் கோயிலுக்குச் செல்ல 200 படிக்கட்டுகளும், 350 தீபங்கள் ஏற்றும் அளவில் ஒரு தீப ஜோதி தூணும் உள்ளது.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Swami, V.N. (2020). Jilha Madhyawarti sahakari Bank online pariksha margadarshak [District middle co-op bank online examination guide] (in மராத்தி). Latur: Vidyabharti Publication.
- ↑ 2.0 2.1 "येळकोट येळकोट जय मल्हार! जेजुरी गडावर दररोज २० हजार भाविकांना मिळणार दर्शन". Lokmat. 2021-10-06. Retrieved 2022-01-12.
- ↑ "The Other India". The Indian Express (in ஆங்கிலம்). 2012-10-29. Retrieved 2022-01-12.
- ↑ 4.0 4.1 Devdutt Pattanaik (January 8, 2017). "Pilgrim nation: Jejuri: Shower of Turmeric" (in en). https://mumbaimirror.indiatimes.com/others/sunday-read/pilgrim-nation-jejuri-shower-of-turmeric/articleshow/56398652.cms.
- ↑ "... Temple in Jejuri..." Bhaskar.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Jejuri Khandoba Mandir Darshan Complete Guide
- ↑ "Why bells from Portuguese-era churches ring in temples across Maharashtra" (in en). 2018-12-22. https://www.hindustantimes.com/more-lifestyle/why-bells-from-portuguese-era-churches-ring-in-temples-across-maharashtra/story-YYcaRl2vQ7rlULOu1oztzI.html.
- ↑ "Touch of Turmeric" (in en). 2018-08-06 இம் மூலத்தில் இருந்து 2022-05-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220527195703/https://www.theweek.in/theweek/cover/2018/06/30/touch-of-turmeric.html.
- ↑ 9.0 9.1 "Champa Shashti today: All you need to know about this significant day" (in en). https://www.timesnownews.com/spiritual/religion/article/champa-shashti-today-all-you-need-to-know-about-this-significant-day/696760.
- ↑ "Jejuri Temple | Film Facilitation Office". ffo.gov.in. Retrieved 2022-01-13.
- ↑ "जेजुरी गडावर खंडोबाच्या दर्शनासाठी भाविकांची अलोट गर्दी; नियम व अटी बंधनकारक". Maharashtra Times (in மராத்தி). Retrieved 2022-01-12.
- ↑ "Bhandara Festival: The Great Turmeric Festival Of Maharashtra You Must Know About". NDTV.com. Retrieved 2022-01-13.
- ↑ "खंडोबा मंदिर का रहस्य, प्रचलित हैं कई हैरान करने वाली कहानियां". Amar Ujala (in இந்தி).
- ↑ 14.0 14.1 "Jejuri". Maharashtra Gazetteer. 2006 [1885].